வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (10/11/2018)

கடைசி தொடர்பு:13:30 (10/11/2018)

``4 விமானங்களில் வெடிகுண்டு” மதுரை விமான நிலையத்துக்கு வந்த அழைப்பால் ஏற்பட்ட பரபரப்பு

மதுரை விமானநிலையத்தில் நின்ற 4 விமானங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மர்ம நபர்கள் போனில் மிரட்டல் விடுத்தது குறித்து போலீஸார் தொடர் விசாரணை செய்து வருகின்றனர். 

வெடிகுண்டு மிரட்டம் வந்த விமான நிலையம்

மதுரை விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவில் வெடிகுண்டு வைத்துள்ளதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். அதில் காலை 9.30 மணிக்கு மதுரையிலிருந்து சென்னை கிளம்பும் விமானத்திலும் வேறு சில விமானங்களிலும் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்ததாக கூறுப்படுகிறது. இதைத்தொடர்ந்து  மதுரை விமான நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸார், மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸார், மோப்ப நாய்கள் மற்றும் நவீன கருவிகளுடன் மதுரை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தொடர் சோதனையில் மர்ம நபர்கள் அளித்த தகவல் புரளி என்று தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த சிலரைப் பிடித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்துவருகின்றனர். நேற்று நள்ளிரவு முதல் இந்த வெடிகுண்டு மிரட்டலால் மதுரை விமானநிலையத்தில் பெரும் பரபரப்பு கிளம்பியது.