வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (10/11/2018)

கடைசி தொடர்பு:19:30 (10/11/2018)

`ஒரு சின்னத்தம்பிய பிடிச்சா, இன்னொரு சின்னத்தம்பி வருவான்’ - கோவை பழங்குடி மக்கள்

ஒரு சின்னத்தம்பி போனால், இன்னொரு சின்னத்தம்பி வருவான் என்று கோவை பழங்குடி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சின்னத்தம்பி போஸ்டர்

கோவையில் காட்டு யானைகளைப் பிடிக்கக் கூடாது என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. சின்னத்தம்பி மற்றும் விநாயகன் என்றழைக்கப்படும் அந்த யானைகள் மிகவும் அமைதியானவை என்றும், அந்த யானைகளை வேறு பகுதிக்கு மாற்றுவது இதற்குச் சரியான தீர்வு இல்லை என்றும் அந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக, யானைகளை பிடிக்கக் கூடாது என்று தடாகம், ஆனைக்கட்டி உள்ளிட்ட பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

கரட்டிஇதுகுறித்து பழங்குடி இனத்தைச் சேர்ந்த கரட்டி, ``உலகத்துக்கு ராஜாவே அவர்தான். அவர் அடிச்சா, கவர்ன்மென்ட்ல இருந்து காசு கொடுப்பாங்க. நம்ம அடிச்சா கேஸ் தான் வரும். அவர் பேரைச் சொல்லி கவர்ன்மென்ட்டே காசு கொடுக்கும். ஒரு ஜான் வயித்துக்கு நம்ம இவ்ளோ கஷ்டப் படறோம். அப்ப 6 ஜான் வயித்துக்கு கஷ்டப்பட தான செய்வாறு. கோயிலுக்கே போனாலும் கடவுளை நேர்ல பார்க்க முடியாது. நம்ம நேர்ல பார்க்கற ஒரே கடவுள் யானைதான். ஒருத்தன பிடிச்சா, இன்னொருத்தன் வருவான். ஒரு சின்னத்தம்பி போனால், இன்னொரு சின்னத்தம்பி வருவான்'' என்று கூறியுள்ளார்.