பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்ட மார்த்தாண்டம் மேம்பாலம்! | Marthandam flyover opens for pedestrians

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (10/11/2018)

கடைசி தொடர்பு:19:50 (10/11/2018)

பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்ட மார்த்தாண்டம் மேம்பாலம்!

மார்த்தாண்டத்தில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் பொதுமக்கள் பார்வைக்காக இன்று திறந்துவிடப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர்.

மார்த்தாண்டம் மேம்பாலம்

நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலையில் மார்த்தாண்டம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வந்தது. போக்குவரத்து நெரிசலை முற்றிலும் குறைக்கும் விதமாக ரூ.142 கோடியில் மார்த்தாண்டத்தாண்டத்தில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு 19.01.2016 அன்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அடிக்கல் நாட்டினார். 10.7.2016 அன்று மேம்பாலத்திற்கான பணி, பூமி பூஜையுடன் தொடங்கியது. மேம்பால பணி நிறைவடையும் கட்டத்தை எட்டிவிட்டது.

மார்த்தாண்டம் மேம்பாலம்

இதை தொடர்ந்து மார்த்தாண்டம் மேம்பாலம் பொதுமக்கள் பார்வைக்காக இன்று மாலை 4 மணிமுதல் 7 மணிவரை திறக்கப்பட்டது. இதில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பொதுமக்களுடன் கலந்துகொண்டார். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மேம்பாலத்தின் மீது நின்று இயற்கை அழகை கண்டு ரசித்தனர். மேலும், மேம்பாலத்தின் மீது நின்று பலர் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். மேம்பாலத்தை பார்வையிட வந்த பொதுமக்களுக்கு இயற்கை உணவுகள் வழங்கப்பட்டன. பொதுமக்களை மகிழ்விக்கும் விதமாக இன்னிசை கச்சேரி, கரகாட்டம் உள்ளிட்டவை கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. "மார்த்தாண்டம் மேம்பாலம் விரைவில் போக்குவரத்திற்காக திறக்கப்படும். வாகன போக்குவரத்து தொடங்கிய பிறகு மக்கள் நடந்து சென்று மேம்பாலத்தின் அழகை ரசிக்க முடியாது. எனவே, பொதுமக்கள் கண்டுகளிக்கும் விதமாக மார்த்தாண்டம் மேம்பாலம் ஒருநாள் மட்டும் திறந்துவிடப்பட்டது" என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.