வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (10/11/2018)

கடைசி தொடர்பு:23:30 (10/11/2018)

விபத்தில் சிக்கி சிகிச்சையில் இருந்த சிறுவன் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழப்பு! - மதுரை சோகம்

விபத்தில் சிக்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த சிறுவன், பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

 

 

 

பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த சிறுவன் தரணிதரன்

ஹெச் 1 என் 1 (H1N1) இன்ஃப்ளுயன்சா வைரஸ் தொற்று காரணமாக வரக்கூடியது பன்றிக்காய்ச்சல். காற்று, சளி உள்ளிட்டவற்றால் எளிதில் பரவக்கூடியது. தற்போது தமிழகத்தில் இந்தக் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். மதுரையை பொறுத்தவரையில் கடந்தாண்டு டெங்கு காய்ச்சல் அதிக அளவு இருந்தது. இந்தாண்டு பன்றிக் காய்ச்சலின் பாதிப்பும் அதிகரித்துவருகிறது. பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

மதுரையை அடுத்த கீழக்குயில்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் இவரது  மகன்  தரணிதரன் (11) பன்றிக்காய்ச்சல் வைரஸ் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்தார் .தரணிதரனுக்கு கடந்த செப்டம்பர் மாதம் விபத்து ஏற்பட்டதால், மதுரை அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தில் காயம்பட்டு சிகிச்சையில் இருந்த சிறுவனுக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு பலியானதால் உறவினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 17 பேர் டெங்கு காய்ச்சலுக்கும் 2 பேர் பன்றிக்காய்ச்சலுக்கும் 106 பேர் வைரஸ் காய்ச்சலுக்கும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.