வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (11/11/2018)

கடைசி தொடர்பு:01:00 (11/11/2018)

`ஜெயலலிதாவை ஸ்லோ பாய்சன் வைத்து கொலை செய்தார்கள்!’ - `திண்டுக்கல்’ சீனிவாசன் பரபரப்பு பேச்சு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஸ்லோ பாய்சன் வைத்துக் கொலை செய்யப்பட்டதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

அமைச்சர் `திண்டுக்கல்’ சீனிவாசன்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிலக்கோட்டை இடைத்தேர்தலுக்குத் தொண்டர்களை தயார் செய்வதற்காக நடந்த கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், எம்.பி உதயகுமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் சீனிவாசன்,"ஜெயலலிதா வின் சொத்து க்களை கொள்ளையடித்த சசிகலா கும்பல், தற்போது நல்லவர்களைப் போல நாடகமாடுகிறார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. அதை இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

`என்னடா நாம சொன்னதை கேட்டுகிட்டு இருந்தவங்க இன்னிக்கு சிறப்பாக ஆட்சி செய்றாங்களே’ என்று ஆத்திரப்படுகிறார்கள். இந்த ஆட்சியை நடக்கவிட்டால் அவர்களுக்கு ஆபத்து என நினைக்கிறார்கள். அதனால் ஆட்சியைக் கலைப்பதற்கு ஸ்டாலினுடன் தினகரன் இணைந்துள்ளார். அம்மாவை வீட்டுக்குள்ளே வைத்து அவருக்குக் கண்டதையும் கொடுத்து சுகரை ஏற்றி விட்டார்கள். ஸ்லோ பாய்சன் கொடுத்து கொன்று விட்டார்கள் தினகரன் தரப்பினர். இப்போது புத்தர்களைப்போல் நியாயம் கேட்க வருகிறார்கள். இவர்களின் உண்மை முகத்தை தெரிந்துக்கொண்டு அ.தி.மு.க தொண்டர்கள் அவர்களிடம் இருந்து விலகியிருக்க வேண்டும்" என்றார். 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், தினகரன் தரப்பினர் தான் கொலை செய்தனர் என அமைச்சர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நீங்க எப்படி பீல் பண்றீங்க