வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (11/11/2018)

கடைசி தொடர்பு:10:41 (15/11/2018)

எந்த வேகத்தில் எங்கே முன்னேறுகிறது 'கஜா' புயல்? #LiveInfographic

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை

தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கஜா புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு திசை நோக்கி நகரும் என்றும் இதனால் நாளை முதல் தமிழகத்தில் 90 முதல் 100 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே வரும் 15-ம் தேதி இந்தப் புயல் கரையைக் கடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 15-ம் தேதி தமிழகத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டும் எனவும் கடலுக்கு சென்றவர்கள் நாளைக்குள் கரை திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 14-ம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழை பொழியக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் காரணமாக நாளை முதல் வங்க கடல் சற்று சீற்றத்துடன் காணப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

கஜா புயல் எந்த வேகத்தில் எந்த இடத்தில் நகர்கிறது என்பதை விளக்கும் வரைபடம்

காற்றின் வேகம் (km/h)

 

மழை (மி.மீ)

 


Also Read: Gaja Cyclone News