வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (11/11/2018)

கடைசி தொடர்பு:07:02 (12/11/2018)

பாடத்திலிருந்து நீக்கப்பட்ட அண்ணாவின் ‘நீதி தேவன் மயக்கம்’! - சிவகங்கை தி.மு.க செயலாளர் கண்டனம்

அறிஞர் அண்ணா எழுதிய நீதி தேவன் மயக்கம் என்ற நாடகத்தை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கிய அழகப்பா பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு சிவகங்கை தி.மு.க நகர செயலாளர்  கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் தன்னுடைய உறுப்பு கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதாவது 2017-20 கல்வியாண்டில் எம்.ஏ தமிழ் பாடத்திட்டத்தில் இரண்டாம் ஆண்டு படிப்பில் அண்ணா எழுதிய  ‘நீதி தேவன் மயக்கம்’ என்கிற நாடக பாடத்திட்டம் உள்ளது. இந்த பாடத்தை நீக்கி அழகப்பா பல்கலைக்கழக உத்தரவிட்டுள்ளது. 

இது பற்றி  சிவகங்கை தி.மு.க நகர செயலாளர்  கூறியிருப்பதாவது, ‘தமிழில் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் அறிஞர் அண்ணா. அவர் தமிழ் இக்கியத்தில் பல பட்டங்களை பெற்றவர். அண்ணாவின் சிறப்பு வாய்ந்த நீதி தேவன் மயக்கம் என்ற பாடத்தை எம்.ஏ தமிழ் பாடத்திட்டத்திலிருந்து  நீக்க கூடாது. அண்ணா படத்தை பொறித்த கட்சிக்கொடி, அண்ணா பெயரை தாங்கி இருக்கும் கட்சியின் ஆட்சியில்  அண்ணாவின் பாடத்திட்டத்தை நீக்கி இருப்பது கல்வி அமைச்சருக்கு தெரிந்தே நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஆக அதிமுக  எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பிறகு அண்ணாவிற்கோ, ஜெயலலிதாவிற்கோ விசுவாசமாக இல்லை என்பதையே காட்டுகிறது.  அதிமுக போன்று நாங்கள் இருக்க முடியாது, அண்ணாவின் கொள்ளையை சுமந்து நிற்கிறோம். அண்ணா எழுதிய நீதி தேவன் மயக்கம் பாடத்தை நீக்கி விட்டு அரு.ராமநாதன் எழுதிய நூலை உள்ளே திணித்திருப்பது கண்டிக்கத்தக்கது அதற்கான பதிலை அழகப்பா பல்கலைக்கழகம் தெளிவாக வெளியிட வேண்டும் இல்லையெனில் தி.மு.க சார்பில் பல்கலைக்கழகம் முன்பு மாபெரும் போராட்டத்தை கட்சியின் அனுமதி பெற்று நடத்துவோம் . பாடத்திட்டத்தில் சேர்க்க மீண்டும் சேர்க்க  வலியுறுத்தி திங்களன்று சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனு கொடுக்க உள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க