6 லட்சம் பேர் எழுதும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு - ஆர்வத்துடன் கலந்து கொண்ட இளைஞர்கள் | TNPSC Group 2 Exam started in Tamilnadu

வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (11/11/2018)

கடைசி தொடர்பு:11:50 (11/11/2018)

6 லட்சம் பேர் எழுதும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு - ஆர்வத்துடன் கலந்து கொண்ட இளைஞர்கள்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 6 லட்சம் பேர் இதில் கலந்து கொண்டு தேர்வு எழுதி வருகிறார்கள்.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு

தமிழக அரசுப் பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.  இதில் சார் பதிவாளர், நகராட்சி ஆணையர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட 1199 காலிப் பணியிடங்களுக்கான தேர்வுகள் இன்று நடைபெறும் எனக் கடந்த சில மாதங்களுக்கு முன் டி.என்.பி.எஸ்.சி அறிவித்திருந்தது. அரசுப் பணிக்காக காத்திருந்த இளைஞர்கள், வேலையில்லா பட்டதாரிகள், தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள், அரசு நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் என சுமார்  6 லட்சம் பேர் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்திருந்தார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 49 தேர்வு மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 95 அறைகளில் 27 ஆயிரத்து 752 பேர் தேர்வு எழுதி வருகின்றனர். இந்த தேர்வு பணிகளைக் கண்காணிக்க 14 நடமாடும் கண்காணிப்பு குழுக்களும்,8 பறக்கும் படை குழுக்களும்,தேர்வு எழுதுவதைப் பதிவு செய்ய 95 ஒளிப்பதிவாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி தேர்வை மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேரில் ஆய்வு செய்தார்.