கோவையில் மியூச்சுவல் ஃபண்ட் கருத்தரங்கு! | Mutual fund meeting at Covai!

வெளியிடப்பட்ட நேரம்: 14:51 (14/11/2018)

கடைசி தொடர்பு:14:51 (14/11/2018)

கோவையில் மியூச்சுவல் ஃபண்ட் கருத்தரங்கு!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடானது வங்கி வைப்புநிதியைவிட கூடுதல் வருமானம் ஈட்டித்தருவதோடு, எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான சிறந்த முதலீட்டு முறையாகவும் இருந்துவருகிறது. மியூச்சுவல் ஃபண்டைப் பொறுத்தவரை, சரியான திட்டத்தைத் தேர்வுசெய்து முதலீடு செய்வதோடு, அந்த முதலீட்டை நீண்ட காலத்துக்கு தொடர்வது அவசியம். இடைப்பட்ட காலங்களில் பங்குச்சந்தையில் ஏற்றஇறக்கங்கள் ஏற்பட்டாலும் அதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை. 

மியூச்சுவல் ஃபண்ட்

பங்குச்சந்தையில் சிறந்த முறையில் முதலீடு செய்து எதிர்காலத்தில் நல்ல பலனை அடைவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்குவதற்காக, கோவையில், நாணயம் விகடன் மற்றும் அசோசியேசன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இன் இந்தியா (AMFI) இணைந்து நடத்தும் `இன்றைய முதலீடு எதிர்காலத்தில் கைகொடுக்கும் - Mutual Funds சரியானது' என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி, வரும் ஞாயிற்றுக்கிழமை (18.11.2018), கோவை, பீளமேடு, அவிநாசி சாலையில் அமைந்துள்ள ஹோட்டல் விஜய் எலென்சாவில், காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சியில், மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர்கள் வி.கோபாலகிருஷ்ணன் மற்றும் பி.மோகன் சிறப்புரையாற்றுகிறார்கள்.

நிகழ்ச்சியில் பங்குபெற விரும்புபவர்கள், VIKATAN <space> பெயர் <space> ஊர் <space>NVAMCB என டைப் செய்து 56161 அல்லது 9790990404 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். செய்யவும். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம் என்று கூறப்பட்டுள்ளது.