வெளியிடப்பட்ட நேரம்: 18:39 (14/11/2018)

கடைசி தொடர்பு:15:22 (16/11/2018)

கஜா புயல்..! - தமிழகத்துக்கு உதவத் தயார் - ராஜ்நாத் சிங் அறிவிப்பு! #Gajacyclone #LiveUpdates

Cyclone Gaja Live Update: 

* 3:20 pm -கஜா புயல் பாதிப்பால் வேதாரண்யத்தில் மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு ஆண்கள் ஒரு பெண் பலியாகியுள்ளனர். 

* 3:02 pm - தமிழக எல்லையை கடந்து கேரளா நோக்கி சென்றது கஜா புயல்.

*  1:43 pm  ‘கஜா புயலை முன்னிட்டு  தமிழக மீனவர்களுக்கு முன் கூட்டியே எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அடுத்த அறிவிப்பு வரும் வரை யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனக் கூறப்பட்டது. எனவே கடுமையாக இருந்தாலும் மீனவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை’ என அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.  

* 1:25 pm  -  ‘கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாகை மாவட்டத்தில் 102 முகாம்கள், திருவாரூர் மாவட்டத்தில் 160 முகாம்கள், கடலூரில் 90 முகாம்கள், தஞ்சை மாவட்டத்தில் 58 முகாம்கள், ராமநாதபுரத்தில் 13 முகாம்கள் அமைக்கப்பட்டு சுமார் 82,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்’ என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். 

* 1:03 pm - கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு உதவிட மத்திய அரசு தயாராக உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசியில் கேட்டறிந்த பின்னர், புயல் பாதிப்புகளை கண்காணிக்கவும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துதரும் படி உள்துறை செயலருக்கு உத்தரவிட்டுள்ளார்.

* 12:28 pm - மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை முதல் மிகக் கன மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார். 

* 12:19 Pm -  ‘இராமநாதபுரம் மாவட்டத்தில் கஜா புயலினால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை. அதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் முன்னதாகவே செய்திருந்தது’ என  அம்மாவட்ட ஆட்சியர் வீரராகவ்ராவ்  தெரிவித்துள்ளார். 

*  11:32 am - கஜா புயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என திமுக தலைவர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். 

* Nov 16, 2018 - 10:20 am  - கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் சிறு காயமடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

* கஜா புயல் கரையை கடந்து திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* கஜா புயலால் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 40க்கும் மேற்பட்ட துணை மின் நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் மின் விநியோகம் முழுமையாக சீராக 2 நாட்கள் ஆகும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  * சென்னையை தவிர தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் நடக்கவிருந்த அரசு சட்ட கல்லூரிகளின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


* கஜா புயல் தாக்கத்தால் பட்டுக்கோட்டையில் தொலைத்தொடர்பு கோபுரங்கள்  சேதமடைந்துள்ளது. இதன்காரணமாக பட்டுக்கோட்டைவாசிகள் மற்றவர்களை  தொடர்பு கொள்ள இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

கோபுரங்கள்

கஜா புயல் முழுமையாக கரையை கடக்க இன்னும் 1 மணி நேரமாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர் மழை காரணமாக விருதுநகர், தூத்துக்குடி, ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல், தொடர் மழை காரணமாகத் தேனி, அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை,சேலம், திருப்பூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் கரையை கடந்ததையடுத்து, பாதிக்கப்பட்டபகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்துள்ளநிலையில், அவற்றை ஜே.சி.பி வாகனங்கள் கொண்டு அப்புறப்படுத்தப்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது.

தீவிர புயலான கஜா நாகப்பட்டினம் - வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் கஜா புயல் கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்த போது அதிகபட்சமாக 111 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது, கஜா புயல் மேற்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக 6 மணி நேரத்தில் வலுவிழக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மையங்கள்

நாகை-வேதாரண்யம் இடையே கஜா புயல் கரையை கடந்தது. தீவிர புயலாகவே கரையை கடந்துள்ளது கஜா.

கஜா புயலின் தாக்கம் அடுத்த 6மணிநேரத்துக்கு பின் குறையும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.


வானிலை

 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை மக்கள் வெளியே செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த 2 மணி நேரத்திற்கு எதிர்திசையில் காற்று பலமாக வீசுக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயலின் கண்பகுதி முழுமையாக கரையைக் கடந்தது. இருப்பினும் எதிர்திசையில் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

 

`கஜா புயலின் கண் பகுதியின் பாதியளவு கடந்துவிட்டது; இன்னும் 30 நிமிடங்களில் மீதி பாதியளவு கடக்கும்" என சென்னை  வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பேரிடர் மேலாண்மை

 மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்

வேதாரண்யத்தின் வடக்கு பகுதியில் 30கி.மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது கஜா புயல். நாகையில் காற்றின் வேகம் குறையவாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தகவல்.

விரைவில் கரையை கடக்கிறது கஜா புயல்

கஜா புயலை நம்பவேண்டாம்;காற்று அமைதியாகவும் புயல் கரையை கடந்துவிட்டது என நினைத்து பொதுமக்கள் வெளியே வரவேண்டாம். நீங்கள் உறங்குவதற்காக நாங்கள் விழித்திருக்கின்றோம் என வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

புயல் நின்றவுடன் மீட்புபணிகள் தொடங்கும்;மழை மற்றும் காற்றால் பாதிக்கபட்டுள்ள பகுதிகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நாகை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கஜா புயலினால் நாகை மாவட்டத்தின் பல இடங்களில் தொலைத்தொடர்பு சேவை பாதிப்பு  ஏற்பட்டுள்ளது. 

பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தபட்டுள்ளது.

காரைக்காலில் மின் கம்பத்தில் மரம் விழுந்ததால் தீப்பற்றி எரிகிறது

ராமேஸ்வரத்தில் பாம்பன் சாலை பாலம் மூடல், தடுப்பு வேலிகள் மூலம் பாம்பன் சாலை பாலத்தை அடைக்க மாவட்ட போலீசார் நடவடிக்கை!

முத்துப்பேட்டை மற்றும் அதனை சுற்றுவட்டப் பகுதியில் பலத்த காற்று வீச தொடங்கியது

நாகையில் காற்றின் வேகம் குறையாது; புயல் கரையை கடந்தும் காற்று வேகம் அதிகரிக்கும் என தகவல்.

கஜா புயலின் கண்பகுதி  கரையை தொட்டது. முழுவதுமாக  இன்னும் 1மணிநேரத்தில் கரையை கடக்கும். கரையை கடந்த பின்பும் காற்று வேகமெடுக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 வேதாரண்யத்தில் வடக்கே 50கி.மீ தொலைவில் கஜா புயல் நிலைகொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் 

``77,000 க்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்திலும், நாகை மாவட்டத்திலும் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதாக தகவல் வருகிறது. காற்றும், மழையும் நிற்கும் வரை வீட்டை விட்டு மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம்.  மக்கள் நிம்மதியாக உறங்கும் வரை நாங்கள் தூங்க மாட்டோம்....விடிய விடிய கட்டுப்பாட்டு அறையிலயே இருந்து மக்களுக்கு தேவையானவைகளை செய்து கொண்டிருப்போம்” என  பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.

கரைக்காலில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரித்து வருகிறது.

வேதாரண்யம், கத்தரிப்புலம், ஆறுகாட்டுத்துறை சுற்றுவட்டார  பகுதிகளில் பலத்த காற்றும் மிதமான மழை பொழிகிறது

நாகை வேதாரண்யம் அருகே தோப்புத்துறையில் பனைமரம் ஒன்று வேகமான காற்றால் வீழ்த்துள்ளது.

கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 3 மணிநேரத்துக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வேதாரண்யத்தின் வடக்கே 60கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது கஜா புயல்

கடலூர் மாவட்டத்தில் கஜா புயலின் எதிரொலியால் சூறைகாற்றுடன் மழை பெய்து வருகிறது.

நாகை வேதாரண்யம் இடையே காற்றின் வேகம் அதிகரிப்பு. 110 கி.மீ வேகத்தில் காற்று வீசுகிறது

கரையை கடக்கத் தொடங்கியுள்ளது கஜா புயல் :

  • கரையை கடக்கத் தொடங்கியது கஜா புயல். கஜா புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. 
  • நள்ளிரவு 12 மணியிலிருந்து கரையை கடக்கத் தொடங்குகிறது கஜா புயல்
  • வேதராண்யத்தில் காற்றின் வேகம் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது.

கரையை கடக்கும் கஜா புயல் :

  • வேதாரண்யத்தின் வடகிழக்கே 60 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது.
  • நாகையின் கிழக்கே 85 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு 12 மணி முதல் 3 மணிவரை புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • கஜா புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது  மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

  • நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடி, காமேஸ்வரம், செருதூர், வேளாங்கண்ணி, அக்கரைப்பேட்டை கடலோரக் கிராமங்களில் கஜா புயலையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் பொதுமக்களுக்காக செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை  அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

    பின்னர் பேசிய அவர்,  ``கஜா புயல் காரணமாக தமிழகத்திலுள்ள அனைத்து கடலோர மாவட்டங்களிலும் பொதுமக்களை பாதுகாப்பாகத் தங்கவைக்கும் வகையில், அவர்களுக்கு உணவு, குடிநீர், கழிப்பறை வசதிகள், மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் செய்து தரும் பொருட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவருகிறது. 

    புயல் கரையைக் கடக்கும்போது  பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். வீட்டின் கதவு, ஜன்னல்களை மூடி வைத்துக்கொள்ள வேண்டும். கஜா புயல் கரையைக் கடக்கும் வரை மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றி, பாதுகாப்பாக இடங்களில் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.



    -ம.ஹரீஷ்
     
  • சென்னை மெரினா கடற்கரையின் இணைப்புச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதேபோல், கடற்கரையில் இருக்கும் மக்களையும் கடற்கரைப் பகுதியில் இருந்து வெளியேறுமாறு போலீஸார் அறிவுறுத்தி வருகிறார்கள்.
  • கஜா புயல் நாகையில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் காற்று 110 கி. மீ வேகத்தில் வீசத்தொடங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சீற்றத்துடன் காணப்படும் புதுச்சேரி கடல்

  • கஜா புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது மாவட்ட நிர்வாகம்.
     
  • கஜா புயல் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள கடலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மாலை 6 மணிக்கு மேல் பேருந்துகளை இயக்க வேண்டாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. 
     
  • கடலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 20 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
     
  • கஜா புயல் இன்று மாலை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கடலூரில் 3 மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகின்றன. மேலும் ஒரு சில இடங்களில் மழையும் பெய்யத் தொடங்கியுள்ளது. 

  • கஜா புயல் எச்சரிக்கை காரணமாக நாகை துறைமுகத்தில் 10, கடலூர் துறைமுகத்தில் 9 -ம் எண் புயல் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கஜா

  • கஜா புயல் காரணமாக கடலூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய 7 மாவட்டங்களில் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களை மாலை 4 மணிக்கு முன்பாக வீட்டுக்குச் செல்லுமாறு  தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
  • கஜா புயல் தீவிரமடைந்து 25 கி.மீ வேகத்தில் கரையை நெருங்கி வருகிறது
  • கஜா புயல் இன்று இரவு சுமார் 11.30 மணியளவில் பாம்பன்- கடலூர் இடையே கரையைக் கடக்கும். புயல் கரையைக் கடக்கும்போது சென்னைக்கு பாதிப்பு இருக்காது. சென்னையில் மிதமான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • மணிக்கு 8 கி.மீ வேகத்தில் இருந்த கஜா புயலின் வேகம் தற்போது 14 கி.மீட்டராக  அதிகரித்துள்ளது. கஜா புயல் இன்று மாலை அல்லது இரவில் கரையைக் கடக்கும் என  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • கஜா புயல் காரணமாக  அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில்  இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கஜா புயல்

  • சென்னைக்கு அருகே 380 கி.மீ, நாகை அருகே 400 கி.மீ. தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது. கஜா புயல் நெருங்குவதால் நாகை, கடலூர், பாம்பன்,புதுச்சேரி, சென்னையில் 3 -ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புயல்

கஜா புயல் எந்த வேகத்தில் எந்த இடத்தில் நகர்கிறது என்பதை விளக்கும் வரைபடம்

காற்றின் வேகம் (km/h)

 

மழை (மி.மீ)

 

தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டது. இந்தக் கஜா புயல் நாளை மாலை கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முதல் புயல் மணிக்கு 6 - 8 கி.மீ என்ற குறைவான வேகத்தில் முன்னேறிய நிலையில் இன்று மாலை முதல் மணிக்கு 12 கி.மீ என்று அதிகரித்தது. 

இதன் காரணமாகக் கடலூர், நாகை, காரைக்கால் உள்ளிட்ட 6 மாவட்டங்களின் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் கனமழை முதல் அதிகனமழை வரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கனமழை மற்றும் புயலைச் சமாளிக்கும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தமிழக அமைச்சர் உதயகுமார், செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.