முதல்வரைக் கண்டித்து டி.டி.வி.தினகரன் நாளை உண்ணாவிரதம்! | T.T.V.Dinakaran Fasting in Gudiyatham

வெளியிடப்பட்ட நேரம்: 10:36 (15/11/2018)

கடைசி தொடர்பு:10:36 (15/11/2018)

முதல்வரைக் கண்டித்து டி.டி.வி.தினகரன் நாளை உண்ணாவிரதம்!

அ.தி.மு.க. அரசைக் கண்டித்து டி.டி.வி.தினகரன், குடியாத்தம் தொகுதியில் நாளை உண்ணாவிரதம் இருக்கிறார்.

டி.டி.வி. தினகரன்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. பிளவுபட்டது. டி.டி.வி.தினகரன் பக்கம் சென்ற ஆம்பூர், குடியாத்தம், சோளிங்கர் உட்பட 18 தொகுதிகளின் எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த 18 தொகுதிகளுடன் ஏற்கெனவே காலியாக உள்ள திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளைச் சேர்த்து மொத்தம் இருபது தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், இடைத்தேர்தல் நடைபெறும் வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் நாளை (16.11.2018) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. குடியாத்தம் தொகுதியில் மக்கள் நலத்திட்டங்களைப் புறக்கணிப்பதாகக் கூறி தமிழக அரசைக் கண்டித்து, சித்தூர் கேட் அருகில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை டி.டி.வி.தினகரன் உண்ணாவிரதம் இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை, வேலூர் மேற்கு மாவட்ட அ.ம.மு.க-வினர் செய்து வருகின்றனர்.