‘ அடுத்த இரண்டு நாள்களில்...!’ - சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய எச்சரிக்கை | cyclonic storm Gaja that crossed Tamil Nadu

வெளியிடப்பட்ட நேரம்: 13:24 (16/11/2018)

கடைசி தொடர்பு:13:24 (16/11/2018)

‘ அடுத்த இரண்டு நாள்களில்...!’ - சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய எச்சரிக்கை

மிழகத்தில் இன்னும் இரண்டு நாள்களில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் சூழல் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மையம்

அதிராம்பட்டினத்தில் நேற்று கரையைக் கடந்தது கஜா புயல். இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. கஜா புயலின் எதிரொலியாக இதுவரையில் தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், ``கஜா புயல் இன்று காலை 11:30 மணியளவில் திண்டுக்கல்லில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டுள்ளது. இன்னும் இரண்டு மணி நேரங்களில் அது கேரளா நோக்கி நகர்ந்து அரபிக்கடலுக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கஜா புயல் காரணமாக தமிழகத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை முதல் மிகக் கன மழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் சில மாவட்டங்களில் மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் வரும் நவம்பர் 18-ம் தேதி மற்றுமொரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் சூழல் நிலவி வருகிறது.

மீனவர்கள் இன்று மதியம் முதல் கடலுக்குச் செல்லலாம். வரும் 17, 18 ஆகிய தேதிகளில் கடலுக்குள் செல்வதைத் தவிர்க்க வேண்டும். கடந்த 1 முதல் 16-ம் தேதி வரை தமிழகத்தில் 22 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சராசரியாக 6% மழை பதிவாகியுள்ளது. கஜா புயலினால் அதிகபட்சமாக திருத்துறைபூண்டி, திருவாரூரில் 17 செ.மீ மழையும் அதிராம்பட்டினத்தில் 16 செ.மீட்டரும் பேராவூரணி, தஞ்சையில் 14 செ.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது” எனத் தெரிவித்தார்.