வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (16/11/2018)

கடைசி தொடர்பு:17:44 (16/11/2018)

பாலாற்றில் நடைபெறும் `முடவன் முழுக்கு' உற்சவம்! - காஞ்சிபுரம் சிவபக்தர்கள் ஏற்பாடு

ஐப்பசி மாதத்தில் நதியில் நீராடினால் பாவங்கள் போகும் என்பது ஐதிகம். ஐப்பசி மாதம் நதியில் நீராட முடியாத பக்தர்கள் அடையும் அதே பலனை கார்த்திகை முதல் தேதி ‘முடவன் முழுக்கு’ வழிபாட்டிலும் பெறலாம் என்பது ஐதிகம்.

முடவன் முழுக்கு காஞ்சிபுரம் பாலாறு

காவிரி, வைகை, தென்பெண்னை, பாலாறு, தாமிரபணி ஆறுகளில் ஐப்பசி மாதம் முழுவதும் விடியற்காலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்கும் மணலால் லிங்கம் செய்து சிவபூஜை செய்தால் வீடுபேறு கிடைக்கும் என்பது சிவபக்தர்களின் நம்பிக்கை. காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த திருஞானசம்பந்தர் இறைப்பணி மற்றும் உழவாரப்பணி அறக்கட்டளையினர் முடவன் முழுக்கு உற்சவத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். காஞ்சிபுரம், செவிலிமேடு அருகே உள்ள மேல்பாலாறு பகுதியில் நாளைக் காலை 8 மணியிலிருந்து 9 மணிவரை இந்த உற்சவம் நடைபெறுகிறது.

ராமேஸ்வரத்தில் வாழ்ந்த முடவன் ஒருவன் காவிரியில் ஐப்பசி துலா நீராடி முக்தி அடைய வேண்டும் என நினைத்திருந்தான். ஐப்பசி முதலாம் நாளிலேயே காவிரி நோக்கிப் புறப்பட்ட அவன், ஐப்பசியின் நிறைவு நாளன்று இரவு மயிலாடுதுறை ஸ்ரீ மயூரநாதர் ஆலயத்துக்கு வந்தார். மிகவும் வருத்தத்துடன் சுவாமியை நினைத்து கோயிலிலேயே படுத்துக்கொண்டார் அந்த முடவர். அப்போது அங்கு தோன்றிய சுவாமி ‘துலா ஸ்நானம்’ முடிந்தாலும் பரவாயில்லை, நீ இப்போதே போய் காவிரியில் ஸ்நானம் செய் என்றார். இதனால் அவர் காவிரியில் நீராடி சுவாமியை தரிசனம் செய்தார். அப்போது தோன்றிய சுவாமி அவனின் முடத்தையும் மனக்குறையையும் போக்கி அருள்பாலித்தார். கார்த்திகை முதல்நாள் காவிரியில் நீராடினால் ஐப்பசி மாதம் முழுவதும் நீராடி வழிபட்ட பலன் கிடைக்கும். இதனால் கார்த்திகை முதல் தேதி பாலாற்றில் மணலால் சிவலிங்கம் அமைத்து வழிபடுவது வழக்கம். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தாமிரபரணி புஷ்கரணிக்குச் செல்ல முடியாதவர்கள் நெல்லையப்பரைக் கண்டுகளிக்கும் வகையில், நெல்லையப்பர், காந்திமதி வளைகாப்பு உற்சவ திருக்கோல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க