கொள்ளை அடித்த வீட்டிலேயே கொண்டாட்டம்! - கோவில்பட்டியை கதிகலக்கிய கொள்ளையர்கள் | 50 pound gold jewells robbed by robbers in kovilpatti

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (19/11/2018)

கடைசி தொடர்பு:00:00 (19/11/2018)

கொள்ளை அடித்த வீட்டிலேயே கொண்டாட்டம்! - கோவில்பட்டியை கதிகலக்கிய கொள்ளையர்கள்

கோவில்பட்டியில் மெயின் சாலையில் உள்ள ஒரு வீட்டில் 50 பவுன் நகைகளை கொள்ளையர்கள் கொள்ளை அடித்துச் சென்றது மட்டுமில்லாமல், வீட்டிற்குள் அமர்ந்து மது சாவகாசமாக அருந்தியும் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.   

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பார்க்பகுதியில் வசதித்து வருகிறார் சத்யநாராயணன். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த ஒரு வருடமாக கோவில்பட்டியில் லோடு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவரது மனைவி சுமத்ரா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சத்யநாராயணன் உறவினர் ஒருவர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு, இரவு வீட்டுக்கு வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். பின்னர், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 50 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் இரண்டு செல்போன்கள், பட்டுப்புடவைகள் உள்ளிட்டவற்றை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து சத்யநாராயணன் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதற்கிடையில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ள சென்ற மர்ம ஆசாமிகள், வீட்டில் வைத்திருந்த ஒரு புல் மது பாட்டிலில் பாதியை அருந்தி விட்டு சென்றதும் தெரிய வந்தது.

கொள்ளையர்களின் கைரேகை பதிவு செய்யப்பட்டுள்ளன. கொள்ளையர்களைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.  கோவில்பட்டியில் இரு பார்க் சாலையும் எப்போதுமே வாகனங்கள் சென்று வரும் சாலை.  அந்த மெயின் சாலையில் உள்ள வீட்டில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம், சாவகாசமாக மது அருந்திவிட்டுச் சென்றுள்ளதும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க