வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (19/11/2018)

கடைசி தொடர்பு:08:00 (19/11/2018)

`கேரள அரசு செஞ்சது சரிதான்!’ - `சர்கார்’ விவகாரத்தில் சீமான்

சர்கார் பட சுவரொட்டிகளில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்று இருந்த காட்சி போஸ்டர்கள் கேரளாவிலும் பரவலாக ஒட்டப்பட்டது. பெரிய அளவில் பேனர்களும் வைக்கப்பட்டன. இது, சமூகத்தில் தீய பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இருக்கிறதென்று, கேரளாவிலுள்ள திருச்சூர் மாவட்டத்தின் சுகாதாரத் துறை அளித்த புகாரின் அடிப்படையில், விஜய் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது நடந்து ஒருவாரம் இருக்கும். 

விஜய்

இத்தகைய சூழலில், நேற்று (11/18/2018) வ.உ.சிதம்பரனாரின் 82 -ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் சிதம்பரனார்க்கு அஞ்சலிசெலுத்தி முடித்ததும், சீமான் பத்திரிகையாளர்களுடன் நடத்திய சந்திப்பில் இதுகுறித்து கேட்கப்பட்டது. "கேரள அரசு செஞ்சது சரிதான். அதை இனி உணர்ந்து, தம்பி விஜய் இந்த மாதிரி காட்சிகளைத் தவிர்க்கணும். அவர் மட்டுமில்லாம எல்லா நடிகர்களும் தவிர்க்கணும். இதுக்கெல்லாம் முன்மாதிரியாக நமக்கு எம்.ஜி.ஆர் அவங்க இருக்காங்க. அக்கறையோடு சொல்றேன். அதை பின்பற்றணும்" என்றார். தவிர, சினிமா டிக்கெட் அரசு நிர்ணயித்த விலையில் மட்டுமே விற்க வேண்டுமெனவும் அழுத்தமாக வலியுறுத்திய சீமான், ரஜினியையும் மறைமுகமாக விமர்சித்ததை அவதானிக்க முடிகிறது. சினிமா டிக்கெட் குறித்துப் பேசிய அவர், "ரூ.600 கோடி செலவுசெய்து, 150 ரூபாய் டிக்கெட் விலைவைத்து எப்படி அதை வசூலிக்க முடியும். அங்கேயே உங்க நேர்மை செத்துப் போகுது.

ரஜினி

அப்போ, நீங்க வந்தா ஊழலை ஒழிப்பேன். லஞ்சத்தை ஒழிப்பேன்னு எப்படிச் சொல்றீங்க" எனக் கேட்டார் சீமான்.