``அன்றே நீதி தேவதை கண்ணீர் வடித்தாள்” - மூவர் விடுதலை குறித்து மாணவியின் தந்தை வேதனை | The father of girl affected in bus burnt case says about the verdict

வெளியிடப்பட்ட நேரம்: 18:21 (19/11/2018)

கடைசி தொடர்பு:18:41 (19/11/2018)

``அன்றே நீதி தேவதை கண்ணீர் வடித்தாள்” - மூவர் விடுதலை குறித்து மாணவியின் தந்தை வேதனை

வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் மூவர் எரித்துக்கொல்லப்பட்ட, தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த மூவரை முன் விடுதலை செய்யும் முடிவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றுக்கொண்டார்.

விருத்தாசலம்

வேலூர் சிறையில் இருந்த ரவீந்திரன், நெடுஞ்செழியன், முனியப்பன் ஆகிய மூவரும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். 2000-ம் ஆண்டில் இலக்கியம்பட்டியில் கோவை வேளாண் பல்கலைக்கழக  மாணவிகள் பயணம் செய்த பேருந்து எரிக்கப்பட்டது.

விருத்தாசலம்

இதில் மரணமடைந்த விருத்தாசலம் பூவனூரைச் சேர்ந்த காயத்ரி என்ற மாணவியின் தந்தையிடம் இதுகுறித்துப் பேசியபோது, ``தர்மபுரி நிகழ்வு சம்பந்தமாக 3 பேரை விடுதலை செய்தது வருந்தத்தக்க செயல். அப்படிச் செல்வதைவிட இது சாதாரணமான செய்தி என்றுதான் சொல்ல வேண்டும். ஏன் என்றால் எப்போது சுப்ரீம் கோர்ட்டில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை, ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றினார்களோ அன்றே நீதி தேவதை தன் தலையைக் குனிந்து வேதனையுடன் கண்ணீர் வடித்தாள், இன்னமும் கண்ணீர் வடித்துக்கொண்டு இருக்கிறாள். இந்த நிகழ்வுக்கும் நீதி தேவதை கண்ணீர் வடிப்பாள். அவர்கள் நாசமாகப் போகட்டும் வேறு என்ன சொல்வது. இந்த நாடு இருக்கும் நிலையில் இப்போது வேறு எதுவும் கூற முடியாது" என்று வேதனையுடன் தெரிவித்தார்.