`பார்க்கவே கஷ்டமா இருக்கு!' - பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பசியைப் போக்கும் அறந்தாங்கி நிஷா | aranthangi nisha involved in cyclone relief works

வெளியிடப்பட்ட நேரம்: 16:16 (21/11/2018)

கடைசி தொடர்பு:16:16 (21/11/2018)

`பார்க்கவே கஷ்டமா இருக்கு!' - பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பசியைப் போக்கும் அறந்தாங்கி நிஷா

ஜா புயலினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரடியாகக் களத்துக்குச் சென்று உதவிகள் செய்துவருகிறார், `கலக்கப்போவது யாரு' அறந்தாங்கி நிஷா. அறந்தாங்கி நிஷாவுடைய காமெடி பலருக்கும் பிடிக்கும். தானும் சிரித்துக்கொண்டு மற்றவர்களைச் சிரிக்க வைப்பதோடு, களத்தில் இறங்கிச் செயல்படும் சமூக அக்கறையும் கொண்டவர். அறந்தாங்கி மட்டுமல்லாது பல கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று உதவிகள் செய்து வருகிறார். அவரைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

அறந்தாங்கி நிஷா

``இப்போ தஞ்சாவூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் உதவிபண்ணிட்டு இருக்கேன். அங்கே உள்ள மக்களுக்கு இப்ப வரைக்கும் எந்த உதவிகளுமே கிடைக்கல. அவங்கள்ல பலரும் கைக்குழந்தைங்கள வெச்சிட்டு கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க. நாலு நாளைக்கு மேலே ஆச்சு. இரண்டு நாள் பட்டினியா இருந்துருக்காங்க. இப்பவும் சாப்பாட்டுக்கு கை ஏந்தி உதவி கேட்கும் நெலமைதான். பார்க்கவே கஷ்டமா இருக்கு. அவங்க எல்லோருமே விவசாயம் செஞ்சி, பலரோட பசியைப் போக்கினவங்க. இன்னைக்கு அவங்க பசியால தவிக்கிறாங்க. குழந்தைக்குத் தாய்ப்பால்கூடக் கொடுக்க முடியாம இருக்காங்க. மழைத்தண்ணீர் தேங்கி இருக்கிறதுனால பூச்சிகள் வருமோன்னு பயப்படுறாங்க. `பகல் பொழுதை எப்படியோ கழிச்சிடுறோம். ராத்திரி எங்களால இருக்க முடியல'னு அவங்க சொல்றப்போ என்ன சொல்றதுன்னே தெரியலை. 

இப்போ சென்னை மாதிரி சிட்டின்னா அவங்களுடைய கஷ்டம் வெளியில் தெரியும். ஆனா, யாருக்கும் தெரியாம ஒரு கிராமத்துக்குள்ளே இருக்குற இவங்களுடைய கஷ்டம் யாருக்குமே தெரியாது. அவங்களுடைய கஷ்டத்தை மீடியாதான் வெளிக்கொண்டு வரணும். அதனாலதான் நான் எல்லா கிராமங்களுக்கும் போய்ட்டு இருக்கேன். உங்களால் முடிஞ்ச உதவிகளை நீங்களும் செய்யுங்க! என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க