‘கஜா புயல்; சத்தமில்லாமல் உதவும் விஜய்’ - நெகிழும் நிர்வாகிகள் | Actor Vijay Surprise Help to gaja cyclone

வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (22/11/2018)

கடைசி தொடர்பு:01:00 (22/11/2018)

‘கஜா புயல்; சத்தமில்லாமல் உதவும் விஜய்’ - நெகிழும் நிர்வாகிகள்

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்களுக்கு உதவும் வகையில், அங்குள்ள விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்குப் பணம் அனுப்பியுள்ளார், நடிகர் விஜய்.

கஜா புயல்

பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு  அரசியல் கட்சியினர், திரைப்படத்துறையினர், பல்வேறு தொழில் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் என அனைவரும்  உதவி வருகிறார்கள். இந்த நிலையில்  5 லட்ச ரூபாய் மதிப்பில் நிவாரண பொருட்களை நடிகர் விஜய் நேற்றுமுன்தினம் அனுப்பி வைத்தார். அதை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் விநியோகம் செய்த நிலையில் நேற்று காலை பாதிக்கப்பட்ட 7 மாவட்ட நிர்வாகிகளின் வங்கி கணக்குகளில் குறிப்பிட்ட தொகையை  டெபாசிட் செய்திருக்கிறார். திடீரென்று தங்கள் வங்கி கணக்குகளில் பணம் டெபாசிட் ஆனதையும் அதை விஜய் அனுப்பியுள்ளதையும் பார்த்து விஜய் மன்ற நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். பின்பு சென்னையிலுள்ள தலைமை நிர்வாகியிடம் விசாரித்த போதுதான் ' பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்களுக்கு  தேவையான பொருட்களை இந்த தொகை மூலம் வாங்கிக் கொடுங்கள். அதற்காக இந்த பணம் விஜய்யால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது' என்று கூறியதும் நிர்வாகிகள் நெகிழ்ந்து விட்டார்கள். நாகை,திருவாரூர், தஞ்சை மாவட்ட நிர்வாகிகளுக்கு குறிப்பிட்ட தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம்.  

தங்க பாண்டியன்

புதுக்கோட்டை மாவட்ட நிவாரணப்பணிக்கு மதுரை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர்  தங்கபாண்டியனுக்கு ஒரு தொகையை அனுப்பியுள்ளனர். அவரிடம் பேசியபோது, "கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆரம்பத்திலிருந்து பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னையிலிருந்து முக்கிய பொருட்களை  விஜய் நேற்றுமுன்தினம் அனுப்பி வைத்தார். அதை விநியோகம் செய்த நிலையில்,  காலை சர்ப்ரைஸாக எங்கள் வங்கி கணக்குகளில் குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்திருந்தார். அவர்தான் அனுப்பினார் என்பது முதலில் எங்களுக்கு தெரியாது. தலைமையில் விசாரித்த பின்புதான் நிவாரண உதவிக்கு அனுப்பி வைத்தது தெரியும். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிர்வாகிகள் அதன் மூலம் நிவாரணப்பணிகளில் இறங்கியுள்ளார்கள். நான் புதுக்கோட்டை மாவட்ட நிவாரணத்தில் நிவாரண உதவிகளை செய்தேன். எந்த விளம்பரமும் இல்லாமல் இந்த உதவிகளை விஜய் செய்து கொண்டிருக்கிறார் " என்றார்.எப்படியோ பாதிக்கப்பட்ட மக்கள் துயர் நீங்கினால் மகிழ்ச்சியே.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க