கடல் சீற்றத்தால் இடுகாட்டிலிருந்து அடித்துச்செல்லப்படும் உடல்கள்! | Bodies that are pulled from graveyard by sea outrage

வெளியிடப்பட்ட நேரம்: 12:16 (22/11/2018)

கடைசி தொடர்பு:12:16 (22/11/2018)

கடல் சீற்றத்தால் இடுகாட்டிலிருந்து அடித்துச்செல்லப்படும் உடல்கள்!

புதுச்சேரி அருகே கடலில் ஏற்பட்ட சீற்றம் காரணமாக, இடுகாட்டில் புதைக்கப்பட்ட உடல்கள் அடித்துச் செல்லப்படுகின்றன.

உடல்கள்

கஜா புயல் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சேதத்தை ஏற்படுத்தியதுபோல, கடலோரப் பகுதியான புதுச்சேரியிலும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் அதிக அளவு மரங்கள் முற்றிலுமாக முறிந்து விழுந்துள்ளன. தென்னை மரங்கள் நிறையவே சாய்ந்துள்ளதால், விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். புயல் சேதங்களால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். புயல் நிவாரணப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேநேரம், தொடர்ந்து மழை பெய்துவரும் வேளையில், கடல் பகுதியில் சீற்றம் ஏற்பட்டு மணல் அரிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது. புதுச்சேரியை அடுத்த தமிழகப் பகுதியான பெரிய முதலியார் சுவடியில், இடுகாடு அமைந்துள்ளது. காலம் காலமாக இங்குதான் இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்றன. தற்போது, கடல் சீற்றம் காரணமாகக் கடல்நீர் ஊருக்குள் புகுந்துள்ளது. இதனால், கடற்கரையிலிருந்து 200 மீட்டர் தூரத்தில் இருந்த இடுகாடு கடலின் சீற்றத்தால் அரிக்கப்பட்டுவருகிறது.  

உடல்கள்

இன்று, கடலின் சீற்றத்தால் அலைகள் அதிகமாக எழும்பியதால், இடுகாட்டில் புதைக்கப்பட்ட உடல்கள் ஒவ்வொறாக வெளிவரத் தொடங்கியுள்ளது. இரண்டு உடல்கள் கடலில் மிதந்தநிலையில், ஆங்காங்கே தலை, கைகள் தெரிகின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அரசு உடனே நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க