`சேதத்தை நேரில் பார்வையிடுங்கள்; பின்னர் நிதி வழங்குங்கள்!'- மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை | Kamal Hassan questioned whether the Chief Minister was reluctant to go to Delhi without counting the gaja storm damage

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (22/11/2018)

கடைசி தொடர்பு:12:30 (22/11/2018)

`சேதத்தை நேரில் பார்வையிடுங்கள்; பின்னர் நிதி வழங்குங்கள்!'- மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை

``கஜாவால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பிரதமர் மோடி நேரில் வந்து பார்வையிட்டு சேதமதிப்பை கணக்கிட்டு உணர்ந்து நிதி வழங்க வேண்டும்'' மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார்.

கமல்ஹாசன்

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நாகை, வேதாரண்யம், புதுக்கோட்டை, திருச்சி  உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்வதற்காகத் திருச்சி வருகை தந்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் நீதி மைய தொண்டர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தங்கியிருந்து இதுவரை 60 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை வழங்கி உள்ளோம். தற்போது 1.20 கோடி மதிப்பிலான பொருள்களுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல இருக்கிறோம். 60 முதல் 70 வாகனங்களில் நிவாரண பொருள்கள், வெவ்வேறு இடங்களுக்குத் தேவைக்கு ஏற்ப அனுப்பப்பட உள்ளது. மேலும் தேவை என்றால், அங்கேயே உட்கார்ந்து விடுவேன். பிரதமர் மோடி நேரில் வந்து பார்வையிட்டு சேதமதிப்பை கணக்கிட்டு உணர்ந்து அந்த நிதியை வழங்க வேண்டும்.

மத்திய அரசு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட பகுதிகளை  எல்-3 என அறிவிக்க வேண்டும். அரசு அலுவலர்கள் இங்கே பாதிப்புகளை கணக்கிட்டு பிறகு, தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, டெல்லிச் சென்று நிவாரணம் கேட்கலாம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி எல்-3 விவகாரம் குறித்து பிரதமர் மோடியிடம் அழுத்தம் கொடுத்தால் நலமாயிருக்கும். எத்தனை ஆயிரம் கோடி நிவாரணம் வேண்டும் என்று தோராயமாக கூறுவதைவிட முழுவதும் பார்வையிட்டு அதன்பிறகு நிவாரணத் தொகையை முழுமையாகத் கேட்டுப்பெறலாம். சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு எதையும் முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியாது. தமிழக முதல்வர் தற்போது அறிவித்துள்ள நிதி போதுமானதாக இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு 20 லட்சம் நிதி கொடுக்க வேண்டும். மீனவர்களுக்கு வருடம்தோறும் இதேபோன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. அதைத் தடுக்க, நிரந்தர தீர்வுக்கு வழிவகைகளும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

வருங்காலங்களில் இதுவரை வந்த பாதிப்புகளை புரிந்து கொண்டு முன்னெச்சரிக்கை வேண்டும். ஐ.நா வியாபார முறையை, வாழும் முறையை கைவிட வேண்டும். இல்லையென்றால், உலகம் நம்மை கை விட்டுவிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. புவி வெப்பமயமாதலின் காரணமாகவே வர்தா, கஜா புயல்கள். இதுபோன்ற நிகழ்வுகள், இனியும் வரும். இது நல்லதுதான். முன்னெச்சரிக்கையாக இது மாறும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க