தமிழக அரசுக்குப் பேரிடர் பாதிப்புகளில் இதுவரை எவ்வளவு உதவி செய்தது மத்திய அரசு? #Vikataninfographics | How much relief fund has been granted by Central Government till now

வெளியிடப்பட்ட நேரம்: 16:48 (22/11/2018)

கடைசி தொடர்பு:16:48 (22/11/2018)

தமிழக அரசுக்குப் பேரிடர் பாதிப்புகளில் இதுவரை எவ்வளவு உதவி செய்தது மத்திய அரசு? #Vikataninfographics

`கஜா' புயல் பாதிப்புகளிலிருந்து மீள தமிழகத்துக்கு மத்திய அரசு 15,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, 'கஜா' புயல் பாதிப்புகளுக்கு நிதியுதவி கோரி இருக்கிறார். 'கஜா' புயல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு நிலவரங்களே, 60 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளதாகக் கூறுகின்றன; எனினும் கள நிலவரங்களில் மாற்றம் இருக்கும்.

'கஜா' புயல் பாதிப்புகளிலிருந்து மீள தமிழகத்துக்கு மத்திய அரசு 15,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ``தமிழக அரசு கோரிய நிதியைப் போர்க்கால அடிப்படையில் விரைந்து வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தியிருக்கிறார்.  

புயல் கரையைக் கடந்த அன்று, சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``நாம் கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுத்து உதவுவதில்லை" என்று கூறியிருந்தார். எடப்பாடி பழனிசாமிக்கு முன்பு முதல்வர்களாக இருந்த ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆட்சிக்காலத்திலும், காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தபோதும், பேரிடர் நிவாரண நிதிகள் குறைந்த அளவிலேயே தரப்பட்டு வருகின்றன.

’கஜா’ புயல் மட்டுமல்லாமல், கடந்த 8 ஆண்டுகளில் தமிழக அரசு மத்திய அரசிடம் ஒதுக்கக் கோரிய நிதியையும், ஒவ்வொரு முறையும் மத்திய அரசு அளித்த நிதியையும் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

மத்திய அரசு நிதி