`நிவாரணப் பொருள்களையும் தாண்டி முக்கியமா ஒண்ணு இருக்கு!’ - ஜி.வி.பிரகாஷ் வேண்டுகோள் | G.v.Prakash kumar released a video over Gaja relief

வெளியிடப்பட்ட நேரம்: 19:41 (22/11/2018)

கடைசி தொடர்பு:19:41 (22/11/2018)

`நிவாரணப் பொருள்களையும் தாண்டி முக்கியமா ஒண்ணு இருக்கு!’ - ஜி.வி.பிரகாஷ் வேண்டுகோள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களுக்கு உதவும்வகையில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ்

டெல்டா மாவட்டங்களில் உள்ள மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். கஜா புயலால் லட்சக்கணக்கில் தென்னை மரங்கள் உள்ளிட்டவை சாய்ந்துள்ளதால் அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகியுள்ளது. அவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து உதவிக்கரங்கள் நீள்கின்றன. ஆனால் நிவாரணப் பொருள்களையும் தாண்டிய முக்கியமான ஒன்றை அம்மக்களுக்கு நாம் செய்ய வேண்டும் எனக் கூறி ஜி.வி.பிரகாஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ``கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளைப் பார்வையிட வந்துள்ளோம். நிவாரணப் பொருள்கள் கொடுக்க வந்துள்ளோம். ஆனால், இங்கே வந்து பார்க்கும்போதுதான் தெரிகிறது ரொம்ப மோசமான நிலை உள்ளது. பல லட்சக்கணக்கான மரங்கள் விழுந்துகிடக்கின்றன. மின்சாரம் வருவதற்கு ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் ஆகும் என கூறுகின்றனர். அரசு, சமூக ஆர்வலர்கள் எல்லாரும் வேலை செய்துவருகின்றனர்.

எவ்வளவு வேலை செய்தாலும் பத்தாத நிலைதான் உள்ளது. நிலைமையை மீண்டும் பழைபடிக்கு கொண்டுவர பல மாதங்கள் ஆகும். இங்க லட்சக்கணக்கான தென்னை மரங்களும் தேங்காக்களும் விழுந்துகிடக்கின்றன. இதுதான் நேரம் என பார்த்து, வியாபாரிகள் குறைவான விலைக்கு பொருள்களை வாங்க முயன்று வருகின்றனர். இது தவறான விஷயம். வழக்கமான மார்க்கெட் விலைக்கு வியாபாரிகள் வாங்க வேண்டும். அதற்கு நாம் உதவி செய்ய வேண்டும். உலகத்துக்கே சோறு போட்ட இடம் டெல்டா. இந்த மக்களுக்கு நம்மளால் செய்ய முடிந்த விஷயம் என்னனா, நல்ல மார்க்கெட் விலையில் வாங்க உதவ வேண்டும். இது அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். மார்க்கெட் விலையில் கொள்முதல் செய்ய கீழ்க்கண்ட எண்களில்  Nimal: 6374484149 guna 8800391662 தொடர்புகொள்ளலாம். இதை ஒருங்கிணைத்து கொடுக்க வேண்டும். இதை அனைவருக்கும் பரப்புங்கள். அரசு இந்தப் பகுதிகளில் மண் பரிசோதனை செய்து, குறுகிய காலப் பயிர்கள் விளைவிக்க உதவ வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.