மனீஷ் பாண்டேவை ஆச்சர்யப்படுத்திய `கேமரா மேன்’ ரோஹித் ஷர்மா! | rohit sharma became cameraman BCCI released video

வெளியிடப்பட்ட நேரம்: 21:56 (22/11/2018)

கடைசி தொடர்பு:22:34 (22/11/2018)

மனீஷ் பாண்டேவை ஆச்சர்யப்படுத்திய `கேமரா மேன்’ ரோஹித் ஷர்மா!

இந்திய அணி வீரர் மணீஷ் பாண்டேவை பல்வேறு கோணங்களில் ரோஹித் ஷர்மா படமெடுக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ள இந்தக் காட்சிகள் வைரலாகி வருகிறது.

ரோஹித் ஷர்மா

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 டி20, நான்கு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டி நேற்று பிரிஸ்மேன் நகரில் நடைபெற்றது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியது இந்திய அணி. 4 ரன்களில் பறிபோன இந்திய அணியின் வெற்றி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றை அளித்தது. இந்நிலையில், இரண்டாவது டி20-க்கு இந்திய அணி தயாராகி வருகிறது.

இப்படியான நிலையில் ஹிட் மேன் என அழைக்கப்படும் ரோஹித் ஷர்மா கேமரா மேனாக மாறிய காட்சியை  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வீடியோவாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், விளம்பரம் ஒன்றுக்காக சக வீரர் மனீஷ் பாண்டேவுக்கு போட்டோ ஷூட் நடந்துள்ளது. அங்கு வந்த, ரோஹித் ஷர்மா, மொபைலில் மனீஷ் பாண்டேவை பல விதமாக வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. 


முழு வீடியோவையும் இந்த லிங்கில் காணலாம்: http://www.bcci.tv/videos/id/7104/when-hitman-became-cameraman