வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (23/11/2018)

கடைசி தொடர்பு:01:00 (23/11/2018)

சிறுமிக்கு பாலியல் தொல்லை - 60 வயது முதியவர் போக்ஸோ சட்டத்தில் கைது

சிவகங்கையில்  பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் தொல்லை

சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அருகே தொடுகுளம் கிராமத்தில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் தொந்தரவு கொடுத்த அழகர்சாமி மீது சிவகங்கை மகளீர் போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.இந்த பாலியல் புகார் குறித்து மாதர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், “தொடுகுளம் கிராமத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பள்ளிக்கு சென்று வந்த மாணவியை அழகர்சாமி தினந்தோறும் பின்தொடர்ந்து சென்றிருக்கிறார்.அப்போதெல்லாம் ஆபாசமாக பேசியிருக்கிறார்.மேலும் அந்த சிறுமியின் வீடு புகுந்து தாக்கியிருக்கிறார் அழகர்சாமி. இதையெல்லாம் கடந்தமாதம் புகாராக எழுதிக்கொண்டு போய் காளையார் கோவில் போலீசில் புகார் செய்திருக்கிறார்கள். இந்த புகாரை படித்துப்பார்த்த காவல் ஆய்வாளர் சிறுமியையும் உடன்சென்ற பாட்டியையும் கம்பால் அடித்து அழகர்சாமி என்னை கெட்ட நோக்கத்தோடு அனுகவில்லை என்று எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பிவிட்டார்.

இந்த கொடுமையை தாங்க முடியாமல் நியாயம் கேட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் மனு அளித்தார்கள். எந்த நடவடிக்கையும் இல்லாததால் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள் தலையிட்டு பாலியல் தொந்தரவு கொடுத்த அழகர்சாமி மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வைத்திருக்கிறார்கள். ஆனாலும் போலீசார் இன்னும் அழகர்சாமியை கைது செய்யவில்லை என்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க