“சிக்கன் பிரியாணி போட்டும் கூட்டம் இல்லை!” - அமைச்சர் தரப்பு அப்செட் | City Gas Scheme foundation stone function

வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (23/11/2018)

கடைசி தொடர்பு:19:41 (23/11/2018)

“சிக்கன் பிரியாணி போட்டும் கூட்டம் இல்லை!” - அமைச்சர் தரப்பு அப்செட்

“கோவையில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்  கலந்துகொண்ட  நிகழ்ச்சியில்  கூட்டம் இல்லாமல் அரங்கம் காலியாக இருந்ததால் அமைச்சர் தரப்பு அச்செட் ஆனது. நிமிர்ந்து அரங்கம் முழுவதையும் பார்த்துபேச வழியில்லாமல் முன் வரிசைகளில் உட்கார்ந்திருந்தவர்களை மட்டும் பார்த்தபடி அமைச்சர் பேசியது  விழா ஏற்பாட்டாளர்களை நெளிய வைத்தது.” 

 பொன்.ராதாகிருஷ்ணன்

 

இந்தியாவில் 129 மாவட்டங்கள் பயனடையும் வகையில் 63 இடங்களில் ‘நகர எரிவாயு திட்டத்தை’ பிரதமர் நரேந்திரமோடி  வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் இன்று துவங்கி வைத்தார். தமிழகத்தில் கோவை, சேலம் ஆகிய இரண்டு மாவட்டங்களில்  இயற்கை எரிவாயு சப்ளை டெண்டரை எடுத்துள்ள ‘இந்தியன் ஆயில்’ நிறுவனம் அதற்காக  கோவை கொடிசியா வளாகத்தின் பிரம்மாண்ட அரங்கில் விழா ஏற்பாடு செய்திருந்தது. 

குளிரூட்டப்பட்ட அரங்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருக்கைகள் போடப்பட்டிருந்தன. நிகழ்ச்சி மதிய உணவுக்குப் பிறகு ஆரம்பித்ததால், வருபவர்களுக்கு லெக் பீஸோடு,   ‘சிக்கன் பிரியாணி’ ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனாலும், ஆட்கள் திரளவில்லை. இந்தியன் ஆயில் நிறுவன ஊழியர்கள். மற்றும் அமைச்சரோடு வந்தவர்கள், மீடியாவைச் சேர்ந்தவர்கள், வரவேற்பு பெண்கள் இவர்களை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் எண்ணிக்கை இருநூறைக்கூட தொடாது. 

  அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய தென்னை வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பி.ஜே.பி மாநில துணை செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் மேடைக்கு வந்தபிறகும் அரங்கத்தில் கூட்டத்தைக் காணோம். செய்வதறியாது முன் வரிசையில் அமர்ந்திருப்பவர்களை பார்த்துக்கொண்டே மைக் பிடித்த அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன், “சுற்றுச்சூழல் பிரச்னைதான் உலக அளவில் முக்கியமயான பிரச்னையாக இருக்கிறது.வாகனங்கள், தொழிற்சாலைகள், வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிபொருட்கள் சுற்றுச்சூழலை  வெகுவாக பாதிக்கின்றன. இதனை சரி செய்ய நாம் இயற்கை எரிவாயுக்கு மாற வேண்டும். காற்றில் இருக்கும் கார்பன் அளவை குறைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பல நகரங்களில் வெற்றிகரமாக செயல்படுவதுபோல் தமிழகத்தில் கோவை உட்பட பல மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படும். எதிர்வரும் காலத்தில் கோவை சிங்கப்பூராக மாறும் என்றார்” 

பிரதமர் மோடி  வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலம் இந்த திட்டத்தை துவங்கி வைக்கிறார். மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் வந்து கலந்துகொள்கிறார் ஆயிரம்பேர்கூடவா வரமாட்டார்கள்? என்ற எண்ணத்தில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த இந்தியன் ஆயில் நிறுவத்தினருக்கு பெரும் ஏமாற்றம். அமைச்சர் தரப்பும் அப்செட்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க