அமைச்சர் வெளியிட்ட பட்டியல் - அதிர்ச்சியளிக்கும் அழிவுகளின் எண்ணிக்கை! | Gaja cyclone Killed Many Lives

வெளியிடப்பட்ட நேரம்: 08:05 (23/11/2018)

கடைசி தொடர்பு:08:05 (23/11/2018)

அமைச்சர் வெளியிட்ட பட்டியல் - அதிர்ச்சியளிக்கும் அழிவுகளின் எண்ணிக்கை!

 

கஜா புயல்

கஜா புயலால் இதுவரை ஏற்பட்ட பாதிப்புகள்குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் நேற்று நிருபர்களிடம் அளித்த அறிக்கை, கஜா புயல் ஏற்படுத்தியிருக்கும் அழிவைக் கோரமாக நமக்குத் தெரியப்படுத்தியிருக்கிறது. மரங்கள், மனிதர்கள், வீடுகள், உடைமைகள் என அழிந்தவற்றின் எண்ணிக்கைகள் அதிர்ச்சியளிக்கின்றன.

அவர் அளித்த அறிக்கையின் சுருக்கம்.

சேதமடைந்த வீடுகள் – 3 லட்சத்து 41  ஆயிரத்து 820

இறந்துபோன கால்நடைகள் – 12 ஆயிரத்து 298

இறந்துபோன பறவைகள் – 92 ஆயிரத்து 507

அழிந்துபோன மரங்கள் – 11 லட்சத்து 32 ஆயிரத்து 686

சாய்ந்துபோன மின்கம்பங்கள் – 1 லட்சத்து 3 ஆயிரத்து 508

இந்த அழிவிலிருந்து மிக விரைவாக மக்களை மீட்டெடுக்கும் வகையில் பணியாற்றவேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. அமைச்சரும் அதை உணர்ந்தே கூறினார். “ மீட்புப் பணிகள் சென்றடையாத கிராமங்களே இருக்கக் கூடாது என்பதுதான் எங்களுடைய கொள்கை. குறுகிய கால அவகாசத்துக்குள் மீட்டுப் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. நிதானமாக, பதற்றம் இல்லாமல் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது” என்றார்.