விபத்துக்குள்ளான ஓ.பி.எஸ் பாதுகாப்பு வாகனம்! 6 போலீஸார் படுகாயம் | ops security officers van accident in thanjavur

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (23/11/2018)

கடைசி தொடர்பு:16:00 (23/11/2018)

விபத்துக்குள்ளான ஓ.பி.எஸ் பாதுகாப்பு வாகனம்! 6 போலீஸார் படுகாயம்

கஜா புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பாதுகாப்புக்குச் சென்ற போலீஸார் வாகனம் விபத்துக்குள்ளானதில் 6 போலீஸ் படுகாயமடைந்தனர்.

விபத்துக்குள்ளான வாகனம்

தஞ்சாவூர் மாவட்டம், கஜா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை இழந்து, வாழ்வாதாரத்தைத் தொலைத்துவிட்டு கண்ணீர்விட்ட நிலையில் இருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ஸும் ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து ஓ.பி.எஸ் நேற்று புதுக்கோட்டை மாவட்டத்திலும் இன்று தஞ்சாவூர் மாவட்டத்திலும் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு வந்தார். இதற்காகக் கூடுதல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் அதிவிரைவுப் படை போலீஸார் வேனில் பாதுகாப்புக்காகச் சென்றனர். போலீஸார் சென்ற வேன் அதிவேகமாகச் சென்றதால் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலடிக்குமூளை பகுதியில் சாலை ஓரத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதில் 6 போலீஸார் படுகாயமடைந்தனர். 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு ஒரத்தநாடு மருத்துவமனையில் முதலுதவி சிசிச்சை அளிக்கப்பட்டது.

விபத்துக்குள்ளான போலீஸார் படுகாயம்

இது ஒருபுறம் இருக்கத் தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓ.பி.எஸ் நிவாரணம் கொடுப்பதற்காக காலை 10 மணிக்கெல்லாம் வரவழைக்கப்பட்டனர். ஆனால், மதியம் வரை ஓ.பி.எஸ் வரவில்லை. எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு நிற்கும் மக்களை அதிகாரிகள் இதுபோல் அலைக்கழிப்பது கடும் வேதனையைத் தருவதாகப் பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க