‘கஜா புயல் நிவாரணம்’ - சிறை ஊதியத்தை வழங்கிய ராஜீவ் கொலை குற்றவாளிகள் | Rajiv Gandhi case prisoners help to Gaja Cyclone Affect People

வெளியிடப்பட்ட நேரம்: 02:15 (24/11/2018)

கடைசி தொடர்பு:02:15 (24/11/2018)

‘கஜா புயல் நிவாரணம்’ - சிறை ஊதியத்தை வழங்கிய ராஜீவ் கொலை குற்றவாளிகள்

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக்கைதியாக 27 வருடங்களாக சிறையில் இருக்கும் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிக்கு நிதி அளித்துள்ளனர்.

கஜா புயல்​​​​​

தமிழக கடலோர மாவட்டங்களை கடுமையாக தாக்கிய கஜா புயலால், மிகப் பெரிய  சேதத்துக்கு டெல்டா மாவட்ட மக்கள் ஆளகியுள்ளார்கள்.  45 க்கும் மேற்பட்டவர்களின்  உயிர்ச்சேதமும், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில், கால்நடைகள், பயிர்கள், மரங்கள்,  படகுகள், வீடுகள், சொத்துக்கள் நாசமாகியுள்ளன.அரசு தரப்புக்கு இணையாக தன்னார்வளர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று வரை உதவிகளை செய்து வருகிறார்கள். இதுபோல் பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்கள் தனியாகவும், முதலமைச்சரின் நிவாரண நிதிக்கும் பங்களிப்புகளை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக்கைதியாக 27 வருடங்களாக சிறையில் இருந்து வருகிறவர்களும் நிவாரணப் பணிக்கு நிதி அளித்துள்ளது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.மதுரை மத்திய சிறையிலுள்ள அருப்புக்கோட்டை ரவிச்சந்திரன் ரூ 5000- ஐ, தனது வழக்கறிஞர் திருமுருகன் மூலமும், வேலூர் பெண்கள் சிறையில் இருந்து வரும்  நளினி ரூ 1000 - ஐ தனது வழக்கறிஞர் மூலமும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளனர்.

தங்களுக்கு விடுதலை கிடைக்குமா, கிடைக்காதா என்று முடிவு தெரியாத துயரமான நிலையில் இருந்த போதிலும், கஜா புயலினால் பெரும் துயரத்துக்கு உள்ளாகியிருக்கும்  மக்களுக்கு, சிறையில் தாங்கள்  வேலை செய்து கிடைத்த ஊதியத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க