“தமிழகத்தில் மோடியை எதிரியாகப் பார்க்கிறார்கள்!” - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு | Modi is seen as an enemy in Tamil Nadu - Krishnaswami allegations

வெளியிடப்பட்ட நேரம்: 03:15 (24/11/2018)

கடைசி தொடர்பு:03:15 (24/11/2018)

“தமிழகத்தில் மோடியை எதிரியாகப் பார்க்கிறார்கள்!” - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

தமிழகத்தில்  பிரதமர் நரேந்திர மோடியை மற்ற அரசியல் கட்சியினர்  எதிரியாகவே பார்க்கும் நிலை உள்ளது என,  புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி  தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணசாமி

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் நடந்த கட்சியின் ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த புதிய தமிழகம் கட்சியின்  தலைவர் கிருஷ்ணசாமி, துாத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர், "தேவேந்திரகுல வேளாளர் மக்களை பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றி, இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியில் சேர்க்கச்  சொல்லி  புதிய தமிழகம் கட்சி, 2 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறது.

இதன் அடுத்தகட்டமாக தேவேந்திர குல வேளாளர்கள்  வசிக்கும் பகுதிகளில்,தேவேந்திர குலவேளாளர்கள் சங்க கூட்டம் நடத்தி, பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதை தீர்மானமாக நிறைவேற்றி,  தாசில்தார் கலெக்டர்களிடம்  மனு அளிக்கும்  இயக்கம் வரும் திங்கள் கிழமை முதல் துவங்க உள்ளது.  

கஜா புயலை  பொறுத்த மட்டிலும் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில், தமிழக அரசு மிகவும் எச்சரிக்கையுடன்  திறம்பட செயல்பட்டிருக்கிறது. இதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை. இதுவரையில் வந்த இயற்கை சீற்றங்களின் போது அரசு இவ்வளவு முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொண்ட வரலாறு இல்லை.

அரசு அவ்வாறு சிறப்பாக செயல்பட வில்லை என்றால், இவ்வளவு பொருட்சேதம் ஏற்பட்டிருக்கும்  நிலையில் உயிர்ச் சேதமும் அதிகமாக இருந்திருக்கும். எப்படி முன்னெச்சரிக்கையாகச் செயல்பட்டு அரசு உயிர்ச் சேதத்தை தடுத்ததோ அதே போல்,இயற்கை பேரிடர் சேதத்தில் இருந்தும் மக்களை சுணக்கம் இல்லாமல், செயல்பட வேண்டும் என்பது என் வேண்டுகோள் ஆகும்.

மத்திய அமைச்சர்கள், பிரதமர் யாரும் இந்த பேரிடரை வந்து பார்வையிடவில்லை என மற்ற கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. பிரதமர்  வரும் போதெல்லாம் அவருக்கு கறுப்பு கொடி காட்டும் சம்பவம்  நடந்துள்ளது. எல்லா சமயத்திலும் தமிழர்கள்  பிரதமரை எதிரியாக பார்ப்பது எந்த வகையில் சரியாக இருக்கும். அவர்  இந்தியாவின்  பிரதமர் அவர் ஒரு நிகழ்ச்சிக்கு வரும் போது மனு அளிக்கலாம், கோரிக்கை வைக்கலாம் அதற்கு பதிலாக கறுப்பு கொடி காட்டுவோம் எனத் தமிழகத்தின் அரசியல் கட்சிகள் அரசியல் செய்தால், எந்த பிரதமர்  நிகழ்ச்சியை வந்து பார்க்க முடியும். மற்ற கட்சிகள் மோடியை எதிரியாகவே பார்க்கும் நிலை உள்ளது. 

 இப்போது பிரதமர்  வந்தால் கறுப்பு  கொடி காட்டமாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம். நாட்டின் பிரதமரை அவமதிப்பது, நாட்டை அவமதிப்பது போல் ஆகாதா?. மக்களுக்கு போராடும்  உரிமை உண்டு. மக்கள் உரிமைகளுக்காக போராட வேண்டும். சமீபத்தில்  தமிழகத்தில் நடந்த காவேரி பிரச்னை ஐ.பி.எல்., சமயத்தின் போது,  தமிழகத்தின் அரசியல் கட்சிகள் பிரதமருக்கு அச்சுறுத்தல் இருந்தால்  பிரதமர் எப்படி வருவார்.

தமிழகத்தில், வெள்ளம் , புயல், வறட்சி  போன்ற பேரிடர்களை அரசியலாக்கும்  ஒரு அநாகரிகமான அரசியல் நடக்கிறது.  இது தமிழகத்தின் அரசியல் கட்சிகள் கஜா புயலை வைத்து,  அரசியல் செய்யாமல்,  அந்த மக்களுக்கு மீட்பு பணிகளை செய்ய உதவ வேண்டும்." எனக் கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க