வெளியிடப்பட்ட நேரம்: 04:15 (24/11/2018)

கடைசி தொடர்பு:04:15 (24/11/2018)

‘மதுரையில் பிடிப்பட்ட 20 ஆயிரம் லாட்டரி சீட்டுகள்!’-தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடும் போலீஸ்

தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மதுரையில் 20ஆயிரம் எண்ணிக்கையில் பிடிபட்டது. குற்றவாளிகளிடம் போலீஸ் விசாரணை நடத்திவருகிறது.

லாட்டரி

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் லாட்டரி சீட்டுகள்  விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. லாட்டரி சீட்டுகள் மூலம் முன்னேறியவர்களை விட நடுத்தெருவிற்கு வந்த குடும்பங்கள் ஏராளம். இதனால் இதன் அபாயத்தை அறிந்த தமிழக அரசு தடை செய்துள்ளது. இருந்த போதும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

லாட்டரி சீட்டுகள் தொடர்ந்து புதுப் புது முறைகளில்  விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அதிக அளவு லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக. காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் மதுரை எஸ்.பி அறிவுருத்தலின்  படி ஆய்வாளர் ஸ்டீபவன் ராஜ் தலைமையில் ஸ்பெசல் டீம் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது அப்போது லாட்டரி விற்பனை செய்துகொண்டிருந்த பாண்டியன் மற்றும் கணேஷன் பிடிபட்டனர். அவர்களிடம் கைபற்றிய சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாட்டரி சீட்டுகளும் 2 லட்சத்து17 ஆயிரம் பணமும் பிடிபட்டது. இதனை அடுத்து இருவரையும் சமயநல்லூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். தப்பியோடிய குற்றவாளியை தனிப்படை தேடிவருகிறது. தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை தொடர்ந்து ஜோராக நடைபெறும் சம்பவம் பொதுமக்களை அச்சமடைய செய்கிறது.