"ராமர் கோயிலை எதிர்க்கிறவர்கள் சுதந்திரமாக நடமாட முடியாது" - சிவசேனா மூத்த தலைவரின் சர்ச்சை பேச்சு | 'When are you going to construct the Ram Mandir?':Shiv Sena questioned

வெளியிடப்பட்ட நேரம்: 05:15 (24/11/2018)

கடைசி தொடர்பு:05:15 (24/11/2018)

"ராமர் கோயிலை எதிர்க்கிறவர்கள் சுதந்திரமாக நடமாட முடியாது" - சிவசேனா மூத்த தலைவரின் சர்ச்சை பேச்சு

ராமர் கோயிலை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் நாட்டில் சுதந்திரமாக நடமாட முடியாது என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராமர் கோயில் கட்டுவோம்

கடந்த முறை பாஜக மத்தியில் ஆட்சியில் இருந்ததைவிட இப்போது பாஜக அதிக விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. மோடி ஆட்சிக்கு வந்து அவர் பதவிக்காலம் முடியப்போகிற சூழல் வரை அது இன்னும் தொடர்கிறது. மோடி கொடுத்த வாக்குறுதிகள், அவர் அறிமுகப்படுத்திய திட்டங்கள், மோடியின் வெளிநாட்டுப் பயணம், பாஜக தலைவர்களின் பேச்சுக்கள் என எல்லாம் மிகப் பெரிய விவாதப் பொருளாக ஆகி அவர்கள் நெருக்கடி மிகுந்திருக்கிற இந்த நிலையில் சிவசேனா அமைப்பின் தலைவரது பேச்சும் பாஜகவை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஏற்கனவே சர்ச்சைக்கு உரிய ராமர் கோயில் விவகாரத்தில் சிறப்பு சட்டம் கொண்டு வந்து அங்கே ராமர் கோயில் கட்ட வேண்டுமென மிகத் தீவிரமாக வலியுறுத்த ஆரம்பித்து இருக்கிறார்கள்.

இதுகுறித்து சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பேசிய விதம் இன்னும் சர்ச்சையை உருவாக்கும் விதமாக இருக்கிறது. "பாபர் மசூதியை 17 நிமிடத்தில் இடித்தோம். சட்டத்தை கொண்டு வருவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?" எனக் கூறியதுடன்  "ராமர் கோயிலை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் நாட்டில் சுதந்திரமாக நடமாட முடியாது" என்று சொல்லியிருக்கிறார்.  இது தொடர்பாக மிகப்பெரிய பேரணி நடத்தும் ஆயத்தப் பணிகளிலும் இந்து அமைப்பினர் ஈடுபட உள்ளதாக தெரிகிறது.