`மத்திய அரசு கார்ப்பரேட் கம்பெனிகளை வளர்த்தெடுக்கிறது' - வெள்ளையன் காட்டம் | Tamil Nadu Trading Societies Association holds protest

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (24/11/2018)

கடைசி தொடர்பு:15:40 (24/11/2018)

`மத்திய அரசு கார்ப்பரேட் கம்பெனிகளை வளர்த்தெடுக்கிறது' - வெள்ளையன் காட்டம்

த்திய அரசு கார்ப்பரேட் கம்பெனிகளை நன்றாக வளர்த்தெடுக்கிறது. தேவையில்லாத சட்டங்கள், திட்டங்களைப் போட்டு சில்லறை வியாபாரிகளை அழிக்கிறார்கள் என நாகர்கோவிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் கூறினார்.

த.வெள்ளைய

நாகர்கோவிலில், புதிய மேம்பாலம் அமைக்கும் திட்டத்தைக் கண்டித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் செட்டிக்குளத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் பேசுகையில், "இந்த ஆட்சி யாருக்காக நடக்கிறது என நாம் புரிந்துகொள்ள வேண்டும். எந்தக் கட்சியின் ஆட்சி நடந்தாலும் நாட்டின் பண முதலைகள் அல்லது வெளிநாட்டினர் வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறார்கள். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய இரண்டு கட்சிகளும் ஒரே மாதிரியாகத்தான் செயல்படுகின்றன. வணிகம் என்பது நமக்கு நாமே அமைத்துக்கொண்ட உரிமை. வணிகர்கள் பொதுமக்களுக்குத் தேவையான பொருள்களை அருகில் கிடைக்கச் செய்கிறோம். வணிகர்கள் போட்டி காரணமாக விலையைக் குறைத்து விற்கிறார்கள். எம்.ஆர்.பி விலைக்கு ஒருபோதும் விற்றதில்லை. நாங்கள் வியாபாரம் நடத்தி அரசுக்கு வரி கட்டுகிறோம். இந்த நிலையில் சில்லறை வணிகத்திற்கு வெளிநாட்டு கம்பெனிகள் அனுமதிக்கப்பட்டன. அப்படி இருந்தும் சில்லறை வணிகத்தை அழிக்க முடியாததால், ஆன்லைன் வர்த்தகத்தைக் கொண்டுவந்துள்ளார்கள். நாகர்கோவிலில் சில்லறை வணிகத்தை முற்றிலும் அழிக்க மேம்பாலம் கொண்டுவருகிறார்கள். இன்றைய மத்திய அரசின் எந்த அசைவாக இருந்தாலும், அம்பானி வகையறாக்களுக்காகத்தான் அசையும். மத்திய அரசு கார்ப்பரேட் கம்பெனிகளை நன்றாக வளர்த்தெடுக்கிறது. தேவையில்லாத சட்டங்கள், திட்டங்களைப் போட்டு சில்லறை வியாபாரிகளை அழிக்கிறார்கள். காங்கிரஸ், வெளிநாட்டு விற்பனைக்குக் கதவைத் திறந்தது, பா.ஜ.க அந்தக் கதவை கழற்றிப் போட்டுவிட்டது. இந்த அநீதிகளை எதிர்த்து நாம் ஓரணியில் நிற்க வேண்டும்" என்றார்.