` சபரிமலை சென்றதற்காக என் மீது வழக்கு போட்டால் போடட்டும்’ - பொன்னார் ஆவேசம்! | Want to file a case against me regarding sabarimala issue i m ready to face says Pon.Rathakrishnan

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (25/11/2018)

கடைசி தொடர்பு:08:44 (26/11/2018)

` சபரிமலை சென்றதற்காக என் மீது வழக்கு போட்டால் போடட்டும்’ - பொன்னார் ஆவேசம்!

சபரிமலை சென்றதற்காக என்மீது வழக்குபோடுவதாக இருந்தால் போடட்டும். வழக்குபோட்டபிறகு அதுகுறித்து பார்த்துக்கொள்ளலாம் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பொன் ராதாகிருஷ்ணன்

பிரதமர் நரேந்திர மோடியின் 50-வது மனதின் குரல் நிகழ்ச்சி நாகர்கோவிலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``மோடி பிரதமராக பொறுப்பு ஏற்றதும் தனது கருத்துகளை மக்களோடு பகிர்ந்துகொள்ள 2014-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி முதல் மனதின் குரல் நிகழ்ச்சியைத் தொடங்கினார். பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி சாதாரண மக்களுக்கும் சிறந்த வழி காட்டுதலாக அமைந்துள்ளது. குழந்தைகளுக்கு எதிராக நட  க்கும் குற்ற நிகழ்வுகள் கண்டிக்கப்பட வேண்டும். குழந்தைகள் கடத்தல் குறித்து ரஜினி கருத்து கூறியிருப்பது மகிழ்ச்சி. மாபியா கும்பல் மட்டுமல்ல தனியாக சிலரும் இதில் ஈடுபடுள்ளனர். குழந்தைகள் கடத்தலைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கஜாபுயல் பாதித்த பகுதிகளை மூன்று கட்டமாக நான் பார்வையிட்டேன். ஆய்வு முடிந்த பிறகுதான் பாதிப்பு குறித்து முழுமையாக அறிய முடியும். நிவாரணப் பொருள்களும், அரிசியும் பல இடங்களுக்குச் சென்றிருக்கிறது.

மனதின் குரல் நிகழ்ச்சி

சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க. மட்டுமல்ல காங்கிரஸ் கட்சியினரும் போராட்டம் நடத்துகிறார்கள். சபரிமலை சென்றதற்காக என்மீது வழக்குபோடுவதாக இருந்தால் போடட்டும். வழக்குபோட்டபிறகு அதுகுறித்து பார்த்துக்கொள்ளலாம். வரும் டிசம்பர் 15-ம் தேதி பார்வதிபுரம் மேம்பாலம் மக்கள் பாவையிடுவதற்காக திறக்கப்படும். அதன்பிறகு மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரம் மேம்பாலங்கள் வாகனபோக்குவரத்துக்கு திறந்துவிடப்படும். நான்காயிரம் கோடி ரூபாய் மதிப்பில் மதுரை - திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது" என்றார்.