இது பாடத்திட்டத்தில் இல்லாத கேள்வி! - சர்ச்சையில் அண்ணா பல்கலைக்கழகம் | controversy in anna university question papers

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (26/11/2018)

கடைசி தொடர்பு:15:50 (26/11/2018)

இது பாடத்திட்டத்தில் இல்லாத கேள்வி! - சர்ச்சையில் அண்ணா பல்கலைக்கழகம்

தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் அண்ணா பல்கலைக்கழகம் தற்போது செமஸ்டர் கேள்வித்தாளில் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இருக்கும் கல்லூரிகளில்  கடந்த 2-ம் தேதி நடைபெற்ற தேர்வில் (செமஸ்டர்) 4-ம் ஆண்டு  ECE  (Electronics and communication engineering) துறைக்கான கேள்வித்தாள் சென்ற 2017-ம் ஆண்டு நடைபெற்ற கேள்வித்தாளை முக்கால்வாசி ஒத்துள்ளது. இதைக் கண்ட மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்தக் கேள்வித்தாளில் 2 மதிப்பெண்கள் கேள்விகள் 2 முதல் 3 வரையில் மாற்றிக் கேட்கப்பட்டுள்ளன என்று கூறினர்.

சர்ச்சைக்குள்ளான செமஸ்டர் கேள்வித்தாள்

இத்தேர்வு முடிந்த உடன், சில மாணவர்கள் அதைப் பற்றி கல்லூரி நிர்வாகத்திடம் கூற, பின்னர் அண்ணா பல்கலைக்கழகம் இத்தேர்வை வரும் 28-ம் தேதி வியாழக்கிழமை மீண்டும் நடத்த உத்தரவிட்டுள்ளது. இது பற்றி சில மாணவர்களிடம் கேட்டபோது, இக்கேள்வித்தாளில் 11,12,13 ஆகிய கேள்விகள் அவுட் ஆப் சிலபஸாக வந்துள்ளது என்று கூறி மறுபடியும் தேர்வு எழுத வேண்டும் என்று கூறுகிறார்கள். தவறான கேள்வித்தாளை தயார் செய்தது அவர்களின் தவறு. ஆனால், மறுபடியும் நீங்கள் அத்தேர்வை எழுத வேண்டும் என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது' என்றனர். ``எப்போதும் பழைய கேள்வித்தாளில் இருந்து சில கேள்விகள் திரும்பத் திரும்ப கேட்கப்படுவது உண்டு. ஆனால், இப்படியா. அண்ணா பல்கலைக்கழகத்தின் கவனமின்மையே இதற்கு முக்கிய காரணம்" என்று கொதிக்கிறார் பேராசிரியர் ஒருவர். கஜா புயலின் காரணமாக இப்பிரச்னை பூதாகரமாக ஆகவில்லை என்று கூறுகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க