வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (26/11/2018)

கடைசி தொடர்பு:23:00 (26/11/2018)

‘அரசாணை நகல் எரிப்பு!’ - அரசுக்கு எதிராகக் கொந்தளித்த ஆசிரியர்கள்

வேலூரில் ஊதியக்குழு அரசாணை நகலைத் தீயிட்டு எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

ஆசிரியர்கள்

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வேலூர் மாவட்டக் கிளை சார்பில் ஊதியப் பிரச்னை தொடர்பான அரசாணை-303 நகல் எரிப்புப் போராட்டம், கலெக்டர் அலுவலகம் எதிரில் இன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மணி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் கலந்துகொண்டனர். போராட்டத்தின்போது ‘‘மத்திய அரசின் இடைநிலை ஆசிரியர்கள் பெறும் ஊதியத்தைப் போராடி பெற்றோம். தற்போது, ஊதியம் சம்பந்தமான எங்கள் உரிமையைப் பறித்த எடப்பாடி - ஓ.பி.எஸ் இரட்டையர் ‘சர்க்காரை’ கண்டிக்கிறோம்’ என்கிற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களைப் பொதுமக்களிடம் விநியோகம் செய்து தமிழக அரசுக்கு எதிராகக் கோஷம் எழுப்பினர். பின்னர், அரசாணை நகல்களை சாலையில் வீசித் தீயிட்டுக் கொளுத்தினர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அனைவரும் கைது செய்தனர். இதன் காரணமாகக் கலெக்டர் அலுவலகப் பகுதி பரபரப்பு காணப்பட்டது.

அரசாணை