``மரங்கள் நம்மையும், சூழலையும் காக்கும்!” - மரக்கன்றுகள் நடும் விழாவில் கரூர் ஆட்சியர் பேச்சு | Trees will save us and our environment, say karur collector

வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (27/11/2018)

கடைசி தொடர்பு:07:10 (27/11/2018)

``மரங்கள் நம்மையும், சூழலையும் காக்கும்!” - மரக்கன்றுகள் நடும் விழாவில் கரூர் ஆட்சியர் பேச்சு

``கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியப் பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 1,550 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன" என்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தெரிவித்தார்.


   மரக்கன்றுகள் நடும் ஆட்சியர்

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 1,500 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.
 
இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன், ``கரூர் மாவட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 84,277 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து, தும்பிவாடி பகுதியில் 450 மரக்கன்றுகள், அணைப்பாளையம் பகுதியில் 250 மரக்கன்றுகள், கூடலூர் பகுதியில் 500 மரக்கன்றுகள், எலவனூர் பகுதியில் 350 மரக்கன்றுகள் என மொத்தம் 1,550 மரக்கன்றுகளை நடவு செய்யும் பணி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஆலம், அரசன், பூவரசு, புங்கன், வேம்பு, நாவல், பாதாணி, வேங்கை உள்ளிட்ட மரவகைகள் நடவு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் நடவு செய்யப்பட்ட மரங்களை பேணிக்காப்பதோடு, அவரவர்களது வீடுகளில் சிறு சிறு செடிகளை நட்டு வளர்க்க வேண்டும். எத்தனை புயல்கள் வந்தாலும், நாம் நட்டு வளர்க்கும் மரங்கள் நம்மையும், சூழலையும் காக்கும்" என்றார்.