குழந்தைகள் காப்பகத்தில் பாலியல் தொல்லை - காப்பக உரிமையாளர் உள்ளிட்ட மூவர் கைது! | Three peoples were arrested in sexual harassment case

வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (27/11/2018)

கடைசி தொடர்பு:07:35 (27/11/2018)

குழந்தைகள் காப்பகத்தில் பாலியல் தொல்லை - காப்பக உரிமையாளர் உள்ளிட்ட மூவர் கைது!

திருவண்ணாமலையில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் பெண் குழந்தைகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் காப்பக உரிமையாளர் மற்றும் மேனேஜர்  கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகள் காப்பக உரிமையாளர்

திருவண்ணாமலை அடுத்த நாச்சிப்பட்டு பகுதியில், மெர்சி என்ற குழந்தைகள் காப்பகம் உள்ளது. இந்தக் காப்பகத்தில் 42 குழந்தைகள் இருந்து வந்தனர். இந்தக் காப்பகத்தை ரூபன்குமார், மெர்சிராணி, மனோகர் ஆகியோர் நடத்தி வந்த நிலையில், காப்பகத்தில் சரியான அடிப்படை வசதிகள் குழந்தைகளுக்கு செய்து தரப்படவில்லை என்றும், காப்பக உரிமையாளர்களே குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் மாவட்ட கலெக்டருக்கு புகார் சென்றுள்ளது. புகாரின் அடிப்படையில், அந்தக் காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் அடிப்படை வசதி சரியாக இல்லை என்று குழந்தைகளை வேறு இடந்துக்கு மாற்றம் செய்து தங்கவைத்துள்ளனர்.

வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதும் முதற்கட்டமாக அங்கு குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த மருத்துவப் பரிசோதனையில் 13, 14 வயது பெண் குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. அந்தக் குழந்தைகளும் அதிகாரிகளிடம், ரூபன்குமார், மனோகரன் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறியுள்ளனர். விசாரணை செய்த அதிகாரிகள், இதுபற்றி மாவட்ட கலெக்டர் கந்தசாமியிடம் கூறியுள்ளனர். கலெக்டர் உத்தரவின் பேரில் பாலியல் தொல்லை கொடுத்த காப்பக உரிமையாளர் ரூபன்குமார், மேனஜர் மனோகரன் மற்றும் இவர்களுக்கு உறுதுணையாக இருந்த டீன் மெர்சிராணி  ஆகிய மூன்று பேரையும் கைது செய்துள்ளது போலீஸ். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க