`2 வயது குழந்தைக்கு மூளையில் காசநோய்’ - அரசு மருத்துவமனை சிகிச்சையால் முன்னேற்றம்! | 2 yr old Girl Suffer from Brain Tuberculosis in Madurai

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (27/11/2018)

கடைசி தொடர்பு:15:20 (27/11/2018)

`2 வயது குழந்தைக்கு மூளையில் காசநோய்’ - அரசு மருத்துவமனை சிகிச்சையால் முன்னேற்றம்!

மதுரை அரசு மருத்துவமனையில் 2 வயதுடைய குழந்தைக்கு உலகிலேயே இல்லாத வகையில் மூளையில் காசநோய் உள்ளதாக கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

காசநோய்


திண்டுக்கல் மாவட்ட சிறுமலைப் பகுதியைச் சேர்ந்த சங்கர், சோலையம்மாள் தம்பதிக்கு 2 வயதில் பரமேஸ்வரி என்ற பெண் குழந்தை உள்ளார். உடல் மெலிந்து  குறிப்பிட்ட நோய்களின் அறிகுறிகள் இல்லாமல் நோயுற்றுள்ளார். இதனால் தனியார் மருத்துவமனையில் நோயின் தன்மையைக் கண்டறிய முடியாமல் சிரமப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து சிறுமலைப் பகுதி ஆரம்ப சுகாதார நிலையத்தின் உதவியோடு பரமேஸ்வரி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குழந்தைகள் நலப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல்வேறு பரிசோதனைகள் செய்தும் குழந்தையின் நோயைக் கண்டறியமுடியவில்லை. பின் மருத்துவர்கள் குழந்தையின் நிலையை முழுமையாக கவனித்து வந்ததில் பரமேஸ்வரிக்கு மூளை பகுதியில் காசநோய் இருப்பது தெரியவந்துள்ளது.

உலகிலேயே யாருக்கும் காசநோய் மூளையில் ஏற்படாத வகையில் பரமேஸ்வரிக்கு ஏற்பட்டதை நினைத்து மருத்துவர்கள் அதிர்ச்சியாகினர். பரமேஸ்வரிக்கு காசநோய் தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிகிச்சையில் குழந்தைக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக  மருத்துவமனை டீன் மருதுபாண்டி மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் நந்தினி குப்புசாமி தெரிவித்தனர். மேலும் பரமேஸ்வரியின் தொடர்ந்து 6 மாதங்கள் கவனித்து முழுமையாக குணமடைய சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.