மாத்தி யோசி தொழில் உத்தி - பிரமாண்ட வெற்றி பெற்ற தைரோகேர் வேலுமணி..! | Chennai Conclave Thyrocare Velumani

வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (27/11/2018)

கடைசி தொடர்பு:12:41 (28/11/2018)

மாத்தி யோசி தொழில் உத்தி - பிரமாண்ட வெற்றி பெற்ற தைரோகேர் வேலுமணி..!

மாத்தி யோசி தொழில் உத்தி - பிரமாண்ட வெற்றி பெற்ற தைரோகேர் வேலுமணி..!

சென்னையில் டிசம்பர் 8,15,16-ம் தேதிகளில் `நாணயம் விகடன்’ சார்பில் `பிசினஸ் அண்ட்  ஃபைனான்ஸ் கான்க்ளேவ்’ நடைபெறுகிறது. 8-ம் தேதி நிகழ்வில் தைரோகேர் நிறுவனர் வேலுமணி, 'கவனம், சிக்கனம், செழிப்பு' (Focus, Frugality and Prosperity!) என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.

சென்னையில் `நாணயம் விகடன்’ சார்பில் நடைபெறும் `பிசினஸ் அண்ட்  ஃபைனான்ஸ் கான்க்ளேவ்’ கலந்துகொள்ள... For Registration Click Here

வேலுமணி

கோவை அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டிபுதூர் என்ற குக்கிராமத்தில் பிறந்த இவர் பி.எஸ்சி பட்டப்படிப்பு முடித்திருக்கிறார். படிப்புக்கேற்ற வேலை தேடி வீதிவீதியாக அலைந்தவர், மும்பையிலிருந்து வேலைவாய்ப்புச் செய்திகள் தாங்கி வரும் இதழைப் பார்த்து, வாரம் 25 தபால் கார்டுகள் எழுதிப்போட்டு, தொடர் முயற்சிகள் செய்ததன் பலனாக பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணியில் சேர்ந்தார். 

பணியிலிருந்தபடியே பி.ஹெச்டி பட்டம் பெற்றார். கல்வித் தகுதி ஏறஏற பதவி உயர்வும் வாய்த்தது. எனினும், தான் வேலை தேடி அலைந்த காலத்திலேயே ‘நானும் ஒரு பிஸினஸ் மேன் ஆவேன். முன்னனுபவம் இல்லாதவர்களுக்கும் வேலை கொடுப்பேன்’ என்று மனதளவில் எடுத்துக்கொண்ட சபதத்தின்படி தனது 14 வருட வேலையை விட்டு வெளியேறியபின், தைரோகேர் நிறுவனத்தைத் தொடங்கினார். இப்படித்தான் இந்த நிறுவனத்தின் தொடக்கம் அமைந்திருந்தது.

சென்னையில் `நாணயம் விகடன்’ சார்பில் நடைபெறும் `பிசினஸ் அண்ட்  ஃபைனான்ஸ் கான்க்ளேவ்’ கலந்துகொள்ள... For Registration Click Here
 

கான்க்ளேவ் 

சென்னையில் `நாணயம் விகடன்’ சார்பில் நடைபெறும் `பிசினஸ் அண்ட்  ஃபைனான்ஸ் கான்க்ளேவ்’ கலந்துகொள்ள... For Registration Click Here

1996-ல் சவுத் மும்பையின் `பைகல்லா’வில் 200 சதுர அடி தைரோகேர் -  தைராய்டு டெஸ்ட்டிங் சென்டராக ஆரம்பித்து, இன்றைக்கு நான்கு லட்சம் சதுர அடியில் வளர்ந்து நிற்கும் தைரோகேர் நிறுவனத்தின் தலைவர் வேலுமணி. அந்த நிறுவனத்தின் முதல் ஊழியரும் அவரேதான். தற்போது அவரது நிறுவனத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10,000 பேர் வரை பணியாற்றுகிறார்கள். இந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 98 சதவிகிதம் பேர் முன் அனுபவம் அற்ற புதியவர்கள், வசதி வாய்ப்பற்றவர்கள், ஆங்கிலம் பேசத் தடுமாறுபவர்கள். இவர்களுக்குத்தான் இங்கே பணியில் சேர முன்னுரிமை. தற்போது இந்த நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 3,000 பரிசோதனை மையங்கள் இயங்கிவருகின்றன.

கான்க்ளேவ்

சென்னையில் `நாணயம் விகடன்’ சார்பில் நடைபெறும் `பிசினஸ் அண்ட்  ஃபைனான்ஸ் கான்க்ளேவ்’ கலந்துகொள்ள... For Registration Click Here

மாற்றி யோசிக்கும் தொழில் உத்தியே இவரது வளர்ச்சிக்குக் காரணம். பிற இடங்களில் பரிசோதனைக்கான கட்டணம் 500 ரூபாய். இவரிடம் வெறும் 100 ரூபாய் மட்டுமே. ஆம், `குறைவான கட்டணம்’ என்ற இவரது அணுகுமுறை, வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தியது. பெரும்பாலான பரிசோதனை நிலையங்கள் இரவில் இயங்குவதில்லை. ஆனால், இவரது பரிசோதனை நிலையம் 24 மணி நேர சேவையை வழங்கியது. பகலில் இவரின் மனைவி பரிசோதனை நிலையத்தைக் கவனித்துக்கொள்வார். இரவு நேரத்தில் இவர் பொறுப்பெடுத்துக்கொள்வார். இப்படி அயராத உழைப்பைத் திட்டமிட்டு செலுத்தியதால் தொடர்ச்சியான வளர்ச்சியைச் சாத்தியமாக்கியவர்.

கான்க்ளேவ்

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றியபோதும் சரி, தற்போது வெற்றிகரமாக தைரோகேர் நிறுவனத்தை நடத்திவரும் இன்றைய காலத்திலும் சரி, இவருக்குச் சொந்தமாக கார் வைத்துக்கொள்ளவில்லை. கால் டாக்ஸியைத்தான் பயன்படுத்துகிறார். முதலீட்டை ஏன் வீணாக முடக்க வேண்டும் என மாற்றி யோசித்து, திட்டமிட்டு செயலாற்றி, சிக்கனமாக வாழ்க்கை நடத்தி, அயராது உழைத்து உயர்நிலைக்கு வந்துள்ள தைரோகேர் நிறுவனரின் சிறப்புரை, வாழ்வில் முன்னேறத்துடிக்கும் தொழில்முனைவோருக்கும் இளைஞர்களுக்கும் உந்துசக்தியாகவும், திருப்புமுனையாகவும் அமையக்கூடும்.   

சென்னையில் `நாணயம் விகடன்’ சார்பில் நடைபெறும் `பிசினஸ் அண்ட்  ஃபைனான்ஸ் கான்க்ளேவ்’ கலந்துகொள்ள...
For Registration Click Here

C:\Users\gauthaman.ds\Downloads

இந்த பிசினஸ் கான்க்ளேவ்-ல் இன்னும் பலர் பேசுகிறார்கள். அதன் விவரம் தெரிந்துகொள்ள மற்றும் முன் பதிவு செய்ய இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்.