காற்றில் பறக்கும் கலெக்டர் உத்தரவு - நொய்யல் ஆற்றில் மீண்டும் மணல் கொள்ளை! | Sand theft in Coimbatore noyyal

வெளியிடப்பட்ட நேரம்: 23:13 (27/11/2018)

கடைசி தொடர்பு:23:13 (27/11/2018)

காற்றில் பறக்கும் கலெக்டர் உத்தரவு - நொய்யல் ஆற்றில் மீண்டும் மணல் கொள்ளை!

கோவை நொய்யல் ஆற்றுப்படுகையில், கழுதைகளை வைத்து மீண்டும் மணல் கொள்ளை நடந்துவருகிறது.

மணல் கொள்ளை

கோவை என்ற நகரம் உருவாவதற்கே நொய்யல் ஆறு முக்கியக் காரணமாக இருந்துள்ளது. ஆனால், சாயநீர், மணல் கொள்ளை, ஆக்கிரமிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் நொய்யல் ஆற்றைத் தொடர்ந்து சேதப்படுத்திவருகிறோம். குறிப்பாக, நொய்யல் ஆற்றுப்படுகையில் கழுதைகள் மற்றும் வாகனங்களை வைத்து 24 மணி நேரமும் மணல் கொள்ளை தொடர்ந்து நடந்து வந்தது.

இதையடுத்து, நொய்யலில் மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என்று இளைஞர்களும், சூழலியல் ஆர்வலர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தனர். இதனால், 'தடையை மீறி மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள்மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தார்.

இதனால், நொய்யலில் மணல் கொள்ளை சற்று குறைந்திருந்தது. இந்நிலையில், தற்போது நொய்யல் ஆற்றுப்படுகையில் மீண்டும் மணல் கொள்ளை தீவிரமடைந்துள்ளது. பட்டப் பகலிலேயே, கழுதைகளை வைத்து மணல் கொள்ளையில் ஈடுபட்டுவருகின்றனர்.  கலெக்டர் அறிவித்த 7 மாதங்களிலேயே நொய்யலில் மீண்டும் மணல் கொள்ளை நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக விளக்கம் கேட்க, கோவை மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டோம். ஆனால், அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை.