வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (28/11/2018)

கடைசி தொடர்பு:07:57 (28/11/2018)

தேசிய சிலம்பப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மதுரை சுட்டிகள்

பஞ்சாபில் நடந்த தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் மதுரையைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு தங்கப்பதக்கங்களைப் பெற்று தமிழகத்துக்கு பெருமையைத் தேடித் தந்திருக்கிறார்கள்.

தேசிய
   

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் ஜி.டி.குரூப் வளாகத்தில் இளையோர் விளையாட்டு, பண்பாட்டு வளர்ச்சி நிறுவனத்தினரால் தேசிய விளையாட்டுப் போட்டி கடந்த வாரம் தொடங்கியது. தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் மதுரை விராட்டிபத்து இராமகிருஷ்ணனின் ஸ்ரீமாருதி சிலம்பப் பள்ளியில், பயிற்சி பெற்ற வேறு வேறு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கலந்துகொண்டார்கள். 

இதில், 3 -ம் வகுப்பு பயிலும் அதீஸ்ராம் ஒற்றைக்கை சிலம்பம் பிரிவில் பத்து வயதுக்கு உட்பட்டவர் பிரிவில் முதலிடம் பெற்றார். யூ.கே.ஜி பயிலும் இளவேந்தன் இரட்டைச் சிலம்பம் பிரிவில் முதலிடம் பெற்றார். 4 -ம் வகுப்பு திவ்யதர்ஷினி  ஒற்றைக்கை சிலம்பம் பிரிவில் பத்து வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் முதலிடம் பெற்றார். 2 -ம் வகுப்பு இமயவர்மன், இரட்டைச் சிலம்பம் பிரிவில் பத்து வயதுக்கு உட்பட்டவர் பிரிவில் முதலிடம் பெற்றார். இவர்களின் சாகசமான சிலம்ப விளையாட்டைப் பார்த்து மற்ற மாநிலங்களிருந்து வந்திருந்தவர்கள் வியப்புடன் கண்டு பாராட்டினார்கள். தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த இவர்களை நாமும் பாராட்டுவோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க