வெளியிடப்பட்ட நேரம்: 14:37 (28/11/2018)

கடைசி தொடர்பு:14:37 (28/11/2018)

ரஜினியின் `2.0' வெற்றிக்காக மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள்!

ரஜினி நடித்து நாளை வெளிவரவிருக்கும் பிரமாண்ட படமான `2.0' மிகப்பெரிய வெற்றியடைய மதுரையில் ரசிகர்கள் கோயிலில் சிறப்பு பூஜைகள், அங்கப்பிரதட்சனம், மண் சோறு உண்ணுதல் போன்ற வேண்டுதல்களை செய்து ரஜினி மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

மண்சோறு சாப்பிடும் ரஜினி ரசிகர்கள்

நாளை உலகமெங்கும் திரையிடப்பட உள்ளது ஷங்கரின் இயக்கத்தில் உருவான `2.0'. நீண்ட காலமாக பலகோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்பதில் ரஜினி ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்த நிலையில், மதுரையில் இன்று ரஜினி ரசிகர்கள் திருப்பரங்குன்றம் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தினார்கள். தொடர்ந்து ரஜினியின் தீவிர ரசிகர்கள் அங்கப்பிரதட்சனம் செய்து அதன் பிறகு மண்சோறு சாப்பிட்டனர். ஏன் இவ்வளவு கடுமையான வேண்டுதல் என்றோம், ``ஹாலிவுட்டுக்கு இணையாக தயாரிக்கப்பட்டுள்ள படம் இது. இதன் மூலம் எங்கள் சூப்பர் ஸ்டார் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளார். அது மட்டுமில்லாமல் இந்தப் படம் ரீலிஸுக்குப்பின் நேரடியாக அரசியலில் ஈடுபட்டு தமிழகத்தின் முதலமைச்சராக வர வேண்டும். அதற்கு அவருக்கு எந்த வகையிலும் தடையும் வரக்கூடாது என்பதற்காக இந்தப் பிரார்த்தனையைச் செய்கிறோம். அது மட்டுமில்லாமல் அனைத்து மக்களும் படம் பார்க்கும் வகையில் டிக்கெட் விலையைக் கூடுதலாக விற்கக் கூடாது என்றும் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.  2.0 படத்துக்குப் பின் சூப்பர் ஸ்டாரை யாராலும் அசைக்க முடியாது" என்றனர். மாவட்ட நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

இதுபோன்ற வெறித்தனமான ரசிகர்கள்தான் ரஜினிக்கு இன்றுவரை பலமாக உள்ளார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க