வத்தல் குடோனில் ரூ.20 லட்சம் குட்கா! - குறிவைத்துப் பிடித்தது தூத்துக்குடி போலீஸ் | Rs 20 lakh worth banned Gudka bundles seized by police in Thoothukudi

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (28/11/2018)

கடைசி தொடர்பு:15:40 (28/11/2018)

வத்தல் குடோனில் ரூ.20 லட்சம் குட்கா! - குறிவைத்துப் பிடித்தது தூத்துக்குடி போலீஸ்

தூத்துக்குடியில் தனியாருக்குச் சொந்தமான வத்தல் குடோன்களில் பதுக்கி வைக்கபட்டிருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

குட்காவை பறிமுதல் செய்த காவல்துறையினர்

தமிழகத்தில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும், இத் தடையை மீறி பல இடங்களில் இப்பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுவதும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், போலீஸார் சோதனையில் ஈடுபடுவதும், போதைப் பொருள்கள் இருந்தால் பறிமுதல் செய்யப்படுவதும் வாடிக்கையாகி விட்டது. இந்த சோதனைகளில் குறைந்தபட்சமாக 50 கிலோ முதல் அதிகபட்சமாக 10 டன் வரையிலும் குட்கா உள்ளிட்டப் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தடை செய்யப்பட்ட குட்கா

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கடைகளில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை குறித்து உணவுப்பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர சோதனையிலும், கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், விளாத்திகுளம் டி.எஸ்.பி. தர்மலிங்கம் தலைமையில் ஆய்வாளர்கள் செல்வகுமார், கலா ஆகியோர் அடங்கிய குழுவினர் விளாத்திகுளம் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில், ஜெயராஜ் என்பவருக்குச் சொந்தமான வத்தல் குடோனிலும், ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள மற்றொருவருக்குச் சொந்தமான குடோனிலும் ரூ.20 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருள்கள் அடங்கிய பண்டல்களை போலீஸார் கைப்பற்றி, இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க