கன்னிசாமியாக சபரிமலைக்குச் செல்லும் அன்புமணி! | Anbumani ramadoss going to Sabarimalai

வெளியிடப்பட்ட நேரம்: 17:08 (28/11/2018)

கடைசி தொடர்பு:17:14 (28/11/2018)

கன்னிசாமியாக சபரிமலைக்குச் செல்லும் அன்புமணி!

கன்னிச்சாமியாகஅன்புமணிராமதாஸ்

பரபரப்பாகக் காணப்படும் சபரிமலைக்கு கன்னிசாமியாக இருமுடி கட்டி பா.ம.க இளைஞரணி தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி இருமுடி கட்டி இன்று புறப்பட்டுச் சென்றார். 

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்குச் சென்ற பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் இந்த ஆண்டு சபரிமலையில் வழக்கத்தைவிட பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சபரிமலைக்குச் சென்றபோது அவரின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டதும்  சர்ச்சையை ஏற்படுத்தியது.

கன்னிசாமியாக அன்புமணிராமதாஸ்

இதைக்கண்டித்து நாகர்கோவிலில் பா.ஜ.க-வினர் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு சபரிமலை பரபரப்பாக உள்ளநிலையில் பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி, சபரிமலைக்கு இன்று புறப்பட்டுள்ளார். மாலை அணிவித்து விரதங்களைக் கடைப்பிடித்த அன்புமணி, இருமுடி கட்டி கன்னிசாமியாக சபரிமலைக்குச் செல்கிறார். அவரின் வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் அவரின் குடும்பத்தினரும் கட்சியினரும் உள்ளனர். 

இதுகுறித்து பா.ம.க-வினரிடம் கேட்டதற்கு, ``முதல்முறையாக அன்புமணி சபரிமலைக்குச் செல்கிறார். சபரிமலைக்குச் செல்ல அவர் விரதம் இருந்தார். இதனால்தான் அவர் புதிய கெட்டஅப்பில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. இன்று அவர், சபரிமலைக்கு இருமுடி கட்டி புறப்பட்டார். இது, அவரின் தனிப்பட்ட விஷயம். அதைப் பெரிதுப்படுத்த வேண்டாம்" என்றனர்.