‘எமனாக வந்த லாரி!’ - 6 மாதக் கைக்குழந்தையுடன் தந்தை பலி | A father with a six-month-old infant

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (29/11/2018)

கடைசி தொடர்பு:00:00 (29/11/2018)

‘எமனாக வந்த லாரி!’ - 6 மாதக் கைக்குழந்தையுடன் தந்தை பலி

குடியாத்தம் அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் 6 மாதக் கைக்குழந்தையுடன் தந்தை பலியானார். தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து

வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அசேன் பாஷா மகன் லியாகத் அலி (29). இவரின் மனைவி தஸ்லிம் (25). இவர்களுக்கு ருத்கையா என்கிற 6 மாத பெண் கைக்குழந்தை இருந்தாள். இன்று மாலை குடியாத்தம் அடுத்த கே.வி.குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு லியாகத் தன் மனைவி, குழந்தையுடன் பைக்கில் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பினார். கே.வி.குப்பம் நீலகண்டபாளையம் வளைவில் திரும்பியபோது, பைக் மீது எதிரே வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் பைக்கில் சென்ற மூவரும் தூக்கி வீசப்பட்டுப் பலத்த காயமடைந்தனர்.

லியாகத் அலியும் அவரின் குழந்தையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகத் துடிதுடித்து உயிரிழந்தனர். படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த தஸ்லிமை அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக மீட்டு குடியாத்தம் அரசு மருத்துமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்தனர். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தந்தை மற்றும் குழந்தையின் சடலங்களை மீட்ட கே.வி.குப்பம் போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.