மு.க. அழகிரி மதுரைக்கு வந்தார்!

மதுரை: தனது விசுவாசியை உடல் நலம் விசாரிப்பதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இரண்டு மணி நேரத்தில் மீண்டும் விமானம் மூலம் சென்னைகே பறந்துவிட்டார்.

இன்று காலை 11 மணியளவில் திடீரென மதுரை வந்தார் அழகிரி. விமானம் மூலம் மதுரை வந்தவர், பின்னர் தனது வீட்டிற்குச் சென்றார். சுமார் 1 மணி நேரத்தில் மீண்டும் வீட்டில் இருந்து புறப்பட்டார். நேராக மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள தனியார் மருத்து வமனைக்குச் சென்றவர், அங்கே சிகிச்சை பெற்று வரும் தி.மு.க. பிரமுகர் குட்டி என்பவரின் மகனைச் சந்தித்து நலம் விசாரித்தார். பின்பு அங்கிருந்து விமான நிலையம் சென்று 1 மணி விமானத்தைப் பிடித்து சென்னைக்குச் சென்றார்.
 
இதுகுறித்து அழகிரி வட்டாரத்தில் விசாரித்த போது, "அண்ணன் சொந்த வேலையாக வந்தார். குட்டி, அண்ணன் வீட்டிலேயே இருந்து அவரது குடும்பத்திற்கு ஓடி ஆடி உதவி செய்தவர். அதனால் தான் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அவருக்கு பழங்காநத்தம் ஏரியாவில் கவுன்சிலர் ஸீட் கொடுக்கப்பட்டது. அவரது விசுவாசம் காரணமாக, அண்ணன் குடும்பத்தினருக்கும் அவ ரைப் பிடித்துப் போனது. இந்தச் சூழலில் அவரது மகன் விபத்தில் சிக்கி, கால் முறிந்து விட் டது. எனவே மதுரை வந்த அண்ணன் அவரையும் சந்தித்து நலம் விசாரித்துவிட்டுப் போனார்" என்கிறார்கள்.

அழகிரி மதுரைக்கு வருவதே இப்போது அதிசய செய்தியாகி விடுகிறது!

-கே.கே.மகேஷ்

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!