வெளியிடப்பட்ட நேரம்: 06:45 (30/11/2018)

கடைசி தொடர்பு:06:45 (30/11/2018)

`வேலூரில் திட்டப்பணிகளின் நிலை என்ன?’ - சட்டமன்ற உறுதிமொழிக் குழு ஆய்வு

வேலூர் மாவட்டத்தில், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் வழங்கிய உறுதிமொழிக்குரிய திட்டப்பணிகளை சட்டமன்ற உறுதிமொழிக் குழுவினர் இன்று ஆய்வு செய்தனர்.

திட்டப்பணி

தமிழக சட்டமன்ற உறுதிமொழிக் குழுத்தலைவர் இன்பதுரை தலைமையில், அக்குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றிருக்கும் எம்.எல்.ஏ-க்கள் தாம்பரம் ராஜா (தி.மு.க), அணைக்கட்டு நந்தகுமார் (தி.மு.க), ஊத்தங்கரை மனோரஞ்சிதம் (அ.தி.மு.க), ஜெயங்கொண்டம் ராமஜெயலிங்கம் (அ.தி.மு.க) ஆகியோர் வேலூர் மாவட்டத்தில் உறுதிமொழிக்குரிய வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்தனர்.
வேலூர் விருதம்பட்டு இ.பி காலனி பகுதியில் அம்ரூத் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பார்வையிட்டனர்.

பின்னர், காட்பாடி காந்திநகரில் திடக்கழிவு மேலாண்மை மையத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து, அணைக்கட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரியூர் ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகள் என மாவட்டம் முழுவதும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுப் பணிகளின்போது கலெக்டர் ராமன் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். இன்றும் (30-ம் தேதி) அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளும் இக்குழுவினர், வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்துகின்றனர்.