செங்கல்பட்டு அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் ரெய்டு! - லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி | vigilance raid in chengalpattu Hospital

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/11/2018)

கடைசி தொடர்பு:07:05 (30/11/2018)

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் ரெய்டு! - லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தியதில் கணக்கில் வராத 41,000 ரூபாய் பிடிபட்டது. இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை, லஞ்ச ஒழிப்புத் துறையினர்

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனை மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான அரசு மருத்துவமனை. சுற்று வட்டாரத்திலிருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் இந்த மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிகிச்சை பெற வரும் ஏழை மக்களிடம் லஞ்சம் வாங்குவது இங்கு வாடிக்கையாகிவிட்டது. இதை எந்த அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. இந்த நிலையில், நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி சிவபாத சேகரன் தலைமையில் பத்து பேர் கொண்ட குழுவினர் மற்றும் ஆயுதப் படை பெண் காவலர்கள் ஐந்து பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் மாலை 5 மணிக்கு திடீரென நுழைந்தனர். அவர்கள் நடத்திய சோதனையில் செவிலியர், உதவியாளர்கள் என பாக்கெட் மற்றும் புடவையில் முடிந்து வைத்திருந்த 41,000 பணம் கைப்பற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து பணம் கைப்பற்றப்பட்ட செவிலியர், உதவியாளர், பாதுகாவலர் ஆகிய ஆறு பேரிடம் இது குறித்து விசாரணை செய்தனர். அப்போது 21,000 மட்டுமே அவர்களால் கணக்கு காட்டப்பட்டது.

குழந்தை பிறந்தவுடன் கேமரா இல்லாத இடத்தில் பெண்ணின் குடும்பத்தினரை வரவழைத்து நூதனமாக லஞ்சம் வாங்குகிறார்கள். ஒவ்வொருவரிடம் இருந்து குறைந்த பட்சம் ஆயிரம் எனப்  பணம் வாங்குகிறார்கள். இதுபோல் தொடர்ந்து சோதனை நடந்தால் மட்டுமே மருத்துவமனைகளில் லஞ்சம் ஓரளவு குறையும் என பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க