வெளியிடப்பட்ட நேரம்: 10:42 (30/11/2018)

கடைசி தொடர்பு:10:42 (30/11/2018)

சிறந்த எழுத்தாளர் விருது பெற்ற தமிழக ஐ.ஏ.எஸ்!

கோவை மாநகராட்சி ஆணையருக்குச் சிறந்த எழுத்தாளருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

விஜயகார்த்திகேயன்

ஹரியானா மாநிலம் குர்கானில் வருடந்தோறும் லிட்ரரி ஃபெஸ்ட் நேஷனல் புத்தகக் கண்காட்சி நடைபெறும். இந்த ஆண்டுக்கான கண்காட்சியின்போது சிறந்த எழுத்தாளர்களைக் கௌரவப்படுத்தும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன. புகழ்பெற்ற இக்கால எழுத்தாளர்களான ரவீந்தர் சிங், குல்ப்ரீத் யாதவ், ரிச்சா லக்கீரியா போன்றோர் இவ்விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். ஏறத்தாழ ஐந்து லட்சம் பார்வையாளர்கள் பங்கேற்றனர். மூன்று விருதுகள் இவ்விழாவில் இந்த ஆண்டு வழங்கப்பட்டது. குல்ப்ரீத் யாதவின் ‘Murder at paharganj’ சிறந்த புத்தகத்துக்கான விருதைப் பெற்றது. சிறந்த புதுமுக எழுத்தாளருக்கான விருதும் இவ்விழாவில் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த விழாவில் கோவை மாநகராட்சி ஆணையரும், தனி அலுவலருமான ஐ.ஏ.எஸ் விஜயகார்த்திகேயனுக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த ஊக்கம் அளிக்கும் எழுத்தாளருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. குடிமைப்பணிக்குத் தயாராகி கொண்டிருக்கும் ஒரு இளைஞரின் வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையில் ``once upon an ias exam'' என்னும் புத்தகத்தை விஜயகார்த்திகேயன் எழுந்தியிருந்தார். இந்தப் புத்தகம் சமீபத்தில் வெளியாகி வாசகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இந்தப் புத்தகத்துக்காக விஜயகார்த்திகேயனுக்கு விருது வழங்கிக் கௌரவித்துள்ளது குர்கான் லிட்ரரி ஃபெஸ்ட் சங்கம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க