ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான முதலீட்டுச் சவால்கள்! - சென்னையில் 3 நாள் ஃபைனான்ஸ் கான்க்ளேவ் | Business and Finance conclave held on dec 8 for Start up companies

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (30/11/2018)

கடைசி தொடர்பு:16:20 (30/11/2018)

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான முதலீட்டுச் சவால்கள்! - சென்னையில் 3 நாள் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்

சென்னையில், டிசம்பர் 8,15,16-ம் தேதிகளில், `நாணயம் விகடன்’ சார்பில் `பிசினஸ் அண்ட்  ஃபைனான்ஸ் கான்க்ளேவ்’ நடைபெறுகிறது. 

தில்லை ராஜன்

டிசம்பர் 8-ம் தேதி நிகழ்ச்சியில், ஒய்.என்.ஓ.எஸ் (YNOS)  வெஞ்சர் எஞ்ஜின் நிறுவனத்தின் இணை நிறுவனரும், ஐ.ஐ.டி. மெட்ராஸ் பேராசிரியருமான தில்லை ராஜன், 'ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான முதலீட்டுச் சவால்கள்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார். 

சென்னையில், `நாணயம் விகடன்’ சார்பில் நடைபெறும் `பிசினஸ் அண்ட்  ஃபைனான்ஸ் கான்க்ளேவ்’-ல் கலந்துகொள்ள... For Registration Click Here

அனுபவமில்லாமல் புதிதாக தொழில் தொடங்க வருபவர்கள் நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவற்றில், தொழில் செய்வதற்கான முதலீடு, வங்கிக் கடன் பிரச்னைதான் முதன்மையானதாக உள்ளன. ஸ்டார்ட் அப் பிசினஸ் செய்பவர்கள், தங்களது முதலீட்டை எப்படிப் பெறுவது, பெருக்குவது, திருப்பிச்செலுத்துவது போன்ற சூட்சுமங்கள் குறித்து பேராசிரியர் தில்லை ராஜன் விரிவாகப் பேச உள்ளார்.

இவர், ஏற்கெனவே நாணயம் விகடன் இதழில், முதல் தலைமுறை தொழில்முனைவோர்களுக்கான தொடர் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரைகளின் தொகுப்பை 'சிகரம் தேடி' என்ற பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார். இவரது சிறப்புரை, ஸ்டார்ட் அப் தொழில்முனைவோர்களுக்கு மிகுந்த பயனளிப்பதாக இருக்கும்.

முன் பதிவு செய்ய 
  http://bit.ly/nvconclave  For details 994041522